(க.கமலநாதன்)

கேகாலை, பதுளை, காலி, மாத்தறை உள்ளிட்ட ஐந்து  மாவட்டங்களில் நீர் சுத்திகரிப்பு மற்றும நீர் வழங்கள் செயற்பாடுகள் முற்றிலும் ஸ்தம்பிதமைடைந்து காணப்படுவதாக நீர் வடிகாலமைப்புச் சபையின் பொறியலாளர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

மருதானை சன சமூக நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய பொhறியலாளர்கள் சங்கத்தின் தலைவர் உபாலி கருணாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

எமது பணிபகிஷ்கரிப்பு போராட்டம் இருவாரங்களாக நீடிக்கும் போாதும் கூட எமக்கான தீர்வுகள் எவையும் தற்போது வரையில் இல்லை. ஆட்சியாளர்கள் அசமந்த போக்கில் செயற்படுகின்றனர். எமக்கான சேவை கொhடுப்பனவுகள் மற்றும்,சம்பளத்தில் குறைப்புச் செய்யப்பட்டுள்ளமையினாலேயே நாங்கள் தற்போது சேவை பகிஷ்கரிப்பை மேற்கொண்டு வருகின்றோம் என தெரிவித்தார்.

எவ்வாறாயினும் எமது பணி பகிஷ்கரிப்பினால் நீர் வழங்கல் செயற்பாடுகள் பாதிக்கப்படவில்லை என்பதை காண்பித்துக்கொாள்ள மாற்று சேவையாளர்களை பணியில் ஈடுபடு்த்தியுள்ளனர். அவர்கள் தொாழில் முன்னனுபவம் இல்லாதவர்கள் என்பதால் பழைமையான முறைமைகளை பயன்படுத்தி நீர் சுத்திகரிப்பு பணிகளை மேற்கொாள்கின்றனர்.