தீர்வுகிடைக்கும் வரை நடமாடும் அம்பியூலன்ஸ் சேவையில் ஈடுபடபோவதில்லை - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

Published By: Vishnu

02 Nov, 2023 | 07:36 PM
image

(இராஜதுரை ஹஷான்)

வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை உடனடியாக தடுத்தல், மருந்து தட்டுப்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் வியாழக்கிழமை (2) முதல் மாவட்ட ரீதியில் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்கள். வடக்கு மாகாணத்தில் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பில் வைத்தியர்கள் ஈடபடவுள்ளனர்.

ஊவா மாகாணத்தில் ஆரம்பமான முதலாவது பணிப்புறக்கணிப்பு போராட்டத்தால் நோயாளர்கள்,வெளிநோயாளர் பிரிவினர் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.பிரபுக்களுக்கான நடமாடும் அம்புலன்ஸ் சேவையில் இருந்து வைத்தியர்கள் வியாழக்கிழமை (2) முதல் விலகியுள்ளார்கள்.

 மாகாண மட்டத்திலான அடையாள பணிப்புறக்கணிப்பு தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமல் விஜேசிங்க குறிப்பிட்டதாவது,

சம்பள அதிகரிப்பை முன்னிலைப்படுத்தி நாங்கள் போராட்டத்தில் ஈடுபடவில்லை. அரசாங்கத்தின் முறையற்ற வரிகொள்கையினால் வைத்தியர்கள் நாளாந்தம் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். இந்த நெருக்கடி தீவிரமடைந்தால் இலவச சுகாதார சேவை முழுமையாக வீழ்ச்சியடையும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்குமாறு அரசாங்கத்திடம் பலமுறை வலியுறுத்தினோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. மாறாக மிகுதியாக உள்ள வைத்தியர்களையும் நாட்டை விட்டு வெளியேற்றும் வகையில் புதிதாக வரிகொள்கை அறிமுகப்படுத்தப்படுகிறது.

அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாட்டை கண்டித்தும் வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்க கோரியும் மாகாண மட்டத்தில் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.முதல் கட்டமாக வியாழக்கிழமை (2)  ஊவா மாகாணத்தில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இன்று வடக்கு மாகாணத்தில் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவார்கள்.

வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பால் வைத்தியசாலைகளின் நாளாந்த செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படாது.அவசர சிகிச்சை பிரிவுகளில் வைத்தியர்கள் பணிபுரிவார்கள். அத்துடன் மகப்பேறு வைத்தியசாலைகளில் சேவையில் உள்ள வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடமாட்டார்கள்.

மாகாண மட்டத்திலான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். எதிர்வரும் வாரம் முக்கிய கேந்திர மையமான மேல்மாகாணத்தில் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவோம்.

இலவச மருத்துவ சேவை எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளை ஆட்சியாளர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக பிரபுக்களுக்கான நடமாடும் அம்புலன்ஸ் சேவையில் இருந்து வைத்தியர்கள் வியாழக்கிழமை (2) விலகியுள்ளார்கள். ஜனாதிபதி,பிரதமர் உட்பட சகல பிரபுக்களும் இதில் உள்ளடங்குவார்கள். முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை இந்த தீர்மானம் அமுலில் இருக்கும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசபந்து தென்னக்கோனை பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை...

2025-03-25 14:09:19
news-image

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்...

2025-03-25 13:46:30
news-image

உள்ளூர் அதிகார சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தும்...

2025-03-25 13:54:47
news-image

சட்டவிரோத தையிட்டி விகாரையும் புதிய மடாலயமும்...

2025-03-25 13:14:31
news-image

தமிழக மீனவர்கள் விவகாரம் தொடர்பில் இலங்கை...

2025-03-25 13:00:07
news-image

இரு வெவ்வேறு பகுதிகளில் முச்சக்கரவண்டிகள் திருட்டு...

2025-03-25 12:53:38
news-image

தேர்தல் செயற்பாடுகள், முறைப்பாடுகள் தொடர்பாக வடக்கு...

2025-03-25 12:39:54
news-image

இலங்கையின் படையதிகாரிகளை வெளிநாடுகள் தாக்கும்போது அவர்களை...

2025-03-25 12:40:16
news-image

போலி விசாக்களைப் பயன்படுத்தி கனடாவுக்குத் தப்பிச்...

2025-03-25 12:36:47
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-25 12:05:28
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் 2...

2025-03-25 12:15:46
news-image

தேசபந்து தென்னக்கோனுக்கு 3 வேளையும் வீட்டிலிருந்து...

2025-03-25 11:29:23