UPDATE ; நெடுந்தீவில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் ; போதைப்பொருள் பாவனையால் உயிரிழப்பு

Published By: Digital Desk 3

02 Nov, 2023 | 04:48 PM
image

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு பகுதியில் வீடொன்றில் தனிமையில் இருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் ஐஸ் போதை பொருளை அளவுக்கு அதிகமாக நுகர்ந்தமையால் உயர் குருதி அழுத்தம் ஏற்பட்டு மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. 

நெடுந்தீவு மேற்கைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் கடந்த திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டு இருந்தார். 

இளைஞனின் உறவினர்கள் வெளியூரில் வசிக்கும் நிலையில் அவர்களின் வீட்டினை இளைஞனே பராமரித்து வருவதுடன், வீட்டின் பாதுகாப்புக்காக அந்த வீட்டில் தங்கியும் இருந்துள்ளார்.

இளைஞனின் வீடு அருகில் உள்ளதால் , தனது வீட்டிற்கு உணவுக்காக சென்று வரும் நிலையில் ,  திங்கட்கிழமை உணவருந்த இளைஞன் வராததால், வீட்டார் இளைஞனை தேடி சென்ற போது , பூட்டிய வீட்டினுள் படுக்கையில் இளைஞன் சடலமாக காணப்பட்டுள்ளார்.

அது தொடர்பில் நெடுந்தீவு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து, உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டநிலையில், ஐஸ் போதை பொருளை அளவுக்கு அதிகமாக நுகர்ந்தமையால் உயர் குருதி அழுத்தம் ஏற்பட்டு மரணம் சம்பவித்து என பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலை செயற்திட்டம்...

2025-01-22 20:22:05
news-image

சட்டத்தை மீறினால் அரிசி ஆலைகள் இராணுவத்தின்...

2025-01-22 16:59:58
news-image

அரச சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரித்தால் பெருந்தோட்ட...

2025-01-22 20:48:59
news-image

கொலன்னாவையில் வீடுகள் உடைக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண...

2025-01-22 17:00:41
news-image

உள்ளூராட்சி மன்றத்தேர்தலைத் தொடர்ந்து அரசியலமைப்பு திருத்தம்...

2025-01-22 20:20:43
news-image

அஸ்வெசும என்பதன் தமிழாக்கம் என்ன ?...

2025-01-22 20:53:27
news-image

நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையே விரைவில் சரக்குக்...

2025-01-22 21:13:08
news-image

உணவு பொருட்களின் விலைகள் குறைப்பு

2025-01-22 21:07:01
news-image

தலைமைத்துவம், சின்னம் தொடர்பில் முரண்பட விரும்பவில்லை...

2025-01-22 20:55:56
news-image

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை...

2025-01-22 17:03:00
news-image

2024ஆம் ஆண்டில் 101 துப்பாக்கி பிரயோக...

2025-01-22 20:51:43
news-image

போலியான தகவல்களை வழங்கிய மின்சார சபையை...

2025-01-22 17:03:43