(எம்.வை.எம்.சியாம்)
வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி 10 மில்லியனுக்கு அதிக பெறுமதியான பணத்தை மோசடி செய்த நபர் பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட குறித்த நபரிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட மேலதிக விசாரணையில் சந்தேகநபர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 42 வயதுடைய பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபருக்கு எதிராக சிலாபம், கனேமுல்ல, வெலிகட, மீகொட, ஆனமடுவ, கடவத்தை, பிலியந்தல மற்றும் குருநாகல் பகுதிகளில் இடம்பெற்ற 14 பண மோசடி சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் 10 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான பணத்தை மோசடி செய்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபருக்கு எதிராக பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தினால் 10 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ள, அதேவேளை பாணந்துறை மேல் நீதிமன்றத்தினால் ஒரு பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபர் நேற்று புதன்கிழமை (01) பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 14 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பொலன்னறுவை குற்றப்புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM