வட மாகாணத்தில் அரசு வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நாளை முதல் வேலை நிறுத்தம்

Published By: Digital Desk 3

02 Nov, 2023 | 01:34 PM
image

வட மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் அரசு வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நாளை வெள்ளிக்கிழமை காலை 8 மணியிலிருந்து நாளை மறுதினம் சனிக்கிழமை காலை 8 மணி வரை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். 

இது தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த செய்தி குறிப்பில்,

நாங்கள் பல மாதங்களாக வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற இருப்பதையும், அது தொடர்பாக ஏற்படக்கூடிய பிரச்சனைகளையும், அதை தடுப்பதற்குரிய வழி வகைகளைப் பற்றியும் ஆட்சியாளர்களுக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் தெளிவுபடுத்தியிருந்தோம். 

இருப்பினும், இதுவரை எந்தவிதமான சாதகமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் உரிய தரப்பினால் மேற்கொள்ளப்படாத நிலையில், நாம் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். 

நாளை முன்னெடுக்கப்பட உள்ள இந்த ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தின்போது வட மாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சைகள் தவிர்ந்த ஏனைய சிகிச்சைகள் இடம்பெற மாட்டாது. 

மகப்பேற்று மருத்துவ சேவைகள், சிறுவர் மருத்துவ சேவைகள், புற்றுநோய் சிகிச்சைகள், சிறுநீரக செயலிழப்புக்கான சிகிச்சைகள் இடம்பெறும்.

 அரசாங்கமானது எமது முன்மொழிவுகளினூடாக தற்சமயம் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முன் வர வேண்டும். 

அவ்வாறு தீர்வை வழங்கி வைத்தியர்களை நாட்டில் தக்க வைத்து இலவச சுகாதார சேவையை பேணுவதற்கு தவறும் பட்சத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் ஆகிய நாங்கள் நமது போராட்டத்தை தீவிர படுத்த வேண்டி ஏற்படும் என்றுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐ.நா.வின் செப்டெம்பர் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக...

2025-03-24 20:02:33
news-image

இந்திய பிரதமருடன் அரசாங்கம் செய்துகொள்ள இருக்கும்...

2025-03-24 20:22:23
news-image

ஐ.நா.வில் புதிய பிரேரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை பிரித்தானிய...

2025-03-24 19:59:17
news-image

2 புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்...

2025-03-24 20:20:30
news-image

தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 263 வேட்புமனுக்கள்...

2025-03-24 20:18:53
news-image

தேசபந்துவை பதவி நீக்கி பொலிஸ்மா அதிபர்...

2025-03-24 19:20:07
news-image

திஸ்ஸ விகாரையின் பூஜை வழிபாடுகளுக்கு எதிர்ப்பு...

2025-03-24 19:13:15
news-image

இறக்குமதி செய்யப்பட்ட சிரி ஸ்கேன் இயந்திரம்...

2025-03-24 20:19:56
news-image

மஹிந்த, ரணிலுடன் ஒன்றிணையப் போவதாக கூறப்படுவது...

2025-03-24 16:40:52
news-image

மூன்று நாள் டெங்கு ஒழிப்பு விசேட...

2025-03-24 19:18:15
news-image

ஐ.தே.க.வுக்கு வைத்த பொறியில் ஜே.வி.பி. சிக்கிக்...

2025-03-24 19:10:48
news-image

நாட்டில் சிக்குன்குனியா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...

2025-03-24 19:21:34