களுத்துறை - பயகல கடற்பகுதியில் சற்றுமுன்னர் படகொன்று தலைகீழாக கவிழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் படகில் பயணித்த பலரை காணவில்லையெனவும், இதுவரையில் இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் நீரில் மூழ்கியுள்ள ஏனையவர்களை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை கடற்பகுகளில் திடீரென மணித்தியாலயத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசலாம் எனவும்,  மீனவர்கள் விழிப்புடன் இருக்குமாறும், காலநிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.