லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான "லியோ" திரைப்படத்தின் வெற்றிவிழா நேற்று (01) நேரு விளையாட்டு அரங்கில் மாலை 6 மணியளவில் நடைபெற்றது.
இந்த வெற்றி விழாவில் நடிகர்கள் அர்ஜுன், கெளதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், நடிகைகளான திரிஷா, மடோனா செபாஸ்டியன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் லலித்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அங்கு விழாவில் பேசிய நடிகர் விஜய், "யாரையும் புண்படுத்த வேண்டாம். அது நமது வேலை இல்லை. நமக்கு நிறைய வேலை உள்ளது. அகிம்சைதான் உண்மையான, வலிமையான ஆயுதம். உங்களது உழைப்பில் எனக்காக செலவு செய்யும் ஒவ்வொரு காசுக்கும் நான் உண்மையாக இருப்பேன்.
நான் குடியிருக்கும் கோவில் நீங்கள்தான். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இவ்வளவு அன்பு வைத்துள்ள உங்களுக்கு நான் என்ன செய்யப் போகிறேன்.
நம் இலக்கும் கனவும் பெரிதாக இருக்க வேண்டும். எதை ஜெயிக்க முடியாதோ அதை ஜெயிக்கனும். அதுதான் முக்கியம்.
சினிமாவில் புரட்சித் தலைவர், நடிகர் திலகம், உலக நாயகன், சூப்பர் ஸ்டார், தல என்றால் அனைத்துக்கும் ஒருவர்தான்... தளபதி என்றால் உங்களுக்கே தெரியும். மக்களாகிய நீங்கள்தான் மன்னர். நான் உங்களுக்கு உதவியாக இருக்கும் தளபதி.... நீங்கள் ஆணையிட்டால் நான் அதை செய்து முடிப்பேன்...
ஜெயிக்க முயற்சி செய்யும் ஒவ்வொருத்தருக்கும் ஓர் இடம் இருக்கும். பெருசா கனவு காணணும் நண்பா!" என்று கூறினார்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM