(நெவில் அன்தனி)
இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையில் மும்பையில் இன்று நடைபெறும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின்போது சிறுவர்களின் மறுமலர்ச்சியை முன்னிட்டு சிறுவர்களுக்கான ஒரு நாள் நிகழ்ச்சி (One Day 4 Children) இடம்பெவுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை (BCCI), ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) ஆகியவற்றுடன் சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC), UNICEF ஆகியன இணைந்து One Day 4 Children நிகழ்ச்சியை நடத்துகின்றன.
இலங்கை, இந்திய வீரர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
உலகம் முழுவதும் உள்ள கோடானுகோடி இரசிகர்களை ஒன்றிணைத்து சிறுவர்களின் மறுமலர்ச்சிக்காக இந்த எற்பாடு செய்துள்ளது.
இந்த சிறப்பு நிகழ்ச்சியின்போது சிறுவர்களே சம்பியனாக இருங்கள் என உச்சக்கட்டத்தில் பிரசாரம் செய்யப்படவுள்ளது.
ஒவ்வொரு குழந்தைக்கும் சிறந்த வளமான உலகை உருவாக்கவும் சிறுமிகளுக்கும் சிறுவர்களுக்கும் சம வாய்ப்புகளை ஏற்படுத்தவும் இந்த நிகழ்ச்சி உதவுகிறது.
UNICEF சிறப்பு தூதுவர் சச்சின் டெண்டுல்கர், ICC சிறப்பு தூதுவர் முத்தையா முரளிதரன் ஆகிய உலக கிரிக்கெட் சாதனை நாயகர்களுடன் ஏனைய கிரிக்கெட் ஜாம்பவான்கள் உட்பட அரங்கில் நிரம்பி வழியுவுள்ள இரசிகர்கள் One Day 4 Children நிகழ்ச்சியை உலகம் முழுவதும் பரப்புவதற்கு ஆதரவளிக்கவுள்ளனர்.
விளையாட்டில் காட்டிய ஈடுபாட்டைவிட இத்தகைய ஒரு முக்கிய, நன்னோக்கு திட்டத்துடன் இணைவதையிட்டு பெருமை அடைவதாக சச்சின் டெண்டுல்கரும் முத்தையா முரளிதரனும் குறிப்பிட்டனர்.
இதேவேளை, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உலகக் கிண்ணப் போட்டிக்கு முன்னர் சிறுவர்களுக்கான ஒரு சிறப்பு கிரிக்கெட் போட்டி வான்கடே விiயாட்டரங்கை அலங்கரிக்கவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM