கடுகஸ்தொட்ட - பொல்கொல்ல தொரகமுவ சந்தியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த இரு இளைஞர்களும் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் காரின் சாரதியை கைதுசெய்து, விசாரணைகளை முன்னெடுத்து சருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.