நாள் பார்த்து விதையிடு ; கோள் பார்த்து பயிரிடு!

Published By: Nanthini

02 Nov, 2023 | 01:12 PM
image

விவசாயம் செய்வதற்கு நாளும் கோளும் முக்கியம். எனவே, பஞ்சாங்கம் பார்த்து பயிர் செய்யும் கலையின் அடிப்படையில் விவசாய செயல்களையும் அதற்குரிய நாட்கள் மற்றும் நட்சத்திரங்களையும் பார்க்கலாம். 

1. உழவுத்தொழில் ஆரம்பித்தல் 

ரோகிணி, புனர்பூசம், பூசம், உத்திரம், ஹஸ்தம், மூலம், பூராடம், உத்திராடம், ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் நன்று. திருதியை, பஞ்சமி, சப்தமி, ஏகாதசி, திரயோதசி முதலிய திதிகளும் ரிஷபம், மிதுனம், கடகம், மகரம், மீனம் முதலிய லக்னங்களும் ஏற்றது.

2. எரு இடுதல்

திருவாதிரை, புனர்பூசம், பூசம், உத்திரம், சித்திரை, அனுஷம், உத்திராடம், உத்திரட்டாதி, முதலிய நட்சத்திரங்கள். துவிதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி முதலிய திதிகள். ரிஷபம், மிதுனம், கடகம், மகரம், மீனம் முதலிய லக்னங்கள் நல்லது. பூமிகாரகனுக்கு உரிய நாளான செவ்வாய்க்கிழமை நல்லது.

3. விதை விதைத்தல் 

ரோகிணி, பூசம், மகம், உத்திரம், ஹஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி, முதலிய நட்சத்திர தினங்கள் ஏற்றவை. திருதியை, பஞ்சமி, சப்தமி, ஏகாதசி, திரயோதசி உத்தமம். ரிஷபம், கடகம், சிம்மம், மீனம் ஏற்ற லக்னங்கள். எட்டாமிடம் சுத்தமாக இருக்க வேண்டும். பாதாள யோகினி கூடாது. ஜென்ம நட்சத்திரம் கூடாது.

4. கதிர் அறுத்தல் 

பரணி, ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, பூசம், மகம், உத்திரம், ஹஸ்தம், விசாகம், அனுஷம், உத்திராடம், திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி முதலிய நட்சத்திரங்களும், துவிதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி, திரயோதசி, பௌர்ணமி முதலிய திதிகளும் நன்று. ரிஷபம், கடகம், சிம்மம், விருச்சிகம், கும்பம் முதலிய லக்னங்கள் அருமை. சனிக்கிழமை விசேஷம். சுமங்கலி அல்லது கன்னிப்பெண்ணை முன்னிறுத்தி இதைச் செய்ய வேண்டும்.

5. தானிய வகைகளை களஞ்சியத்தில் வைத்தல்

பரணி, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, மகம், உத்திரம், அஸ்தம், அனுஷம், உத்திராடம், திருவோணம், உத்திரட்டாதி முதலிய நட்சத்திரங்களும், துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, பெளர்ணமி திதிகளும் நன்று. ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய லக்னங்கள் நன்று.

6. தானியங்களை செலவிடல் 

அசுவினி, ரோகிணி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், மகம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி முதலிய நட்சத்திரங்கள் நன்று. துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகிய திதிகள் நன்று. ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம் முதலிய லக்னங்கள் நன்று. சனிக்கிழமை நல்ல நாள். வெள்ளிக்கிழமை கூடாது.

7. மாடு முதலான கால்நடைகளை வாங்குதல், கொடுத்தல்

விசாகம், அனுஷம், மூலம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி, அசுவினி, கிருத்திகை, ரோகிணி, மிருக சீரிடம், புனர்பூசம், பூசம், பூராடம், திருவோணம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி முதலிய நட்சத்திரங்கள் நன்று. துவிதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, பௌர்ணமி ஆகிய திதிகள் நன்று. சிம்மம், தனுசு, மகரம் ஆகிய லக்னங்கள் நன்று. எட்டாமிடம் சுத்தமாக இருக்க வேண்டும். மாடுகளை கொடுக்கும்போது புதன்கிழமை, வெள்ளிக்கிழமை கொடுக்கக்கூடாது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right