ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் செலுத்திய கார் கட்டுப்பாட்டை இழந்து கடையையும் தொலைபேசிக் கம்பத்தையும் மோதியது : ஒருவர் பலி!

Published By: Digital Desk 3

02 Nov, 2023 | 11:02 AM
image

மாவனல்லை ஹிங்குல பிரதேசத்தில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி மரக்கறி கடை  ஒன்றை  மோதியதில் அங்கு பணிபுரிந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று  புதன்கிழமை (01) மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த காரை ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் ஒருவர்  செலுத்திச் சென்றமையும் தெரிய வந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர் மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். இவர் மாவனல்லை, ஹிங்குல பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடைய திருமணமானவர்.

குறித்த கார் கொழும்பிலிருந்து கண்டி நோக்கி சென்று கொண்டிருந்தபோது சாரதியினால்  வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி காய்கறி கடையை மோதி  பலத்த சேதம் விளைவித்ததுடன் அருகிலிருந்த தொலைபேசி கம்பத்திலும் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் மாவனல்லை  ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், பிரேதபரிசோதனைகள் மாவனல்லை ஆதார வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தை ஏற்படுத்திய காரை  செலுத்திச்  சென்றதாகக் கூறப்படும் மத்தேகொட பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரலை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களை...

2024-09-07 18:28:56
news-image

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் வெற்றிபெற்று தமிழர்களின்...

2024-09-07 22:59:45
news-image

அநுர கூறுவதைப் போன்று சிங்கள மக்களின் ...

2024-09-07 18:22:22
news-image

மாகாண சபை முறைமையை மீண்டும் பலப்படுத்தி...

2024-09-07 22:26:01
news-image

எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடேன் - பா.அரியநேத்திரன்

2024-09-07 14:22:14
news-image

கடந்து வந்த பாதையை ஜனாதிபதி மறந்துவிட்டார்...

2024-09-07 18:17:06
news-image

தமிழ்த் தேசிய நிலைப்பாட்டின் அடிப்படையில் தமிழ்...

2024-09-07 17:30:15
news-image

கருத்துச் சுதந்திரம் பாதிப்பற்ற வகையில் கண்காணிக்கப்பட...

2024-09-07 18:12:30
news-image

சிலாபம் - புத்தளம் வீதியில் விபத்து;...

2024-09-07 18:25:56
news-image

ராஜபக்சர்கள் சீரழித்த நாட்டை மீண்டும் ரணில்,...

2024-09-07 21:53:36
news-image

கல்முனையில் யானையால் தாக்கப்பட்டு யாசகர் பலி

2024-09-07 17:57:54
news-image

பொத்துவில் பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர்...

2024-09-07 17:35:27