டுபாயில் இடம்பெற்றுவரும் பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் நேற்றைய தினம் இடம்பெற்ற இரண்டாவது போட்டியில்  பேஸ்வர் சல்மி அணியை எதிர்கொண்ட இஸ்லாமாபாத் யுணைட்டட் இறுதி பந்துவரை போராடி திரில் வெற்றிபெற்றது.

137 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய இஸ்லாமாபாத் யுணைட்டட் அணி கடைசிவரை போராடி இறுதி பந்தில் வெற்றிபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய  பேஸ்வர் சல்மி அணி 9 விக்கட்டுளை இழந்து 136 ஓட்டங்களை பெற்றது.

இதில் ஹபீஸ் அதிகபட்சமாக 28 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

இலகுவான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இஸ்லாமாபாத் யுணைட்டட்  அணி பல தடுமாற்றத்துக்கு மத்தியில் இலக்கை எட்டியது.

தனியொரு ஆளாக நின்று துடுப்பெடுத்தாடிய டெவைன் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 72 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக டெவைன் ஸ்மித் தெரிவுசெய்யப்பட்டார்