'சார்பட்டா'வை விட 100 மடங்கு சிறப்பான படம் 'தங்கலான்' - டீசர் வெளியீட்டு விழாவில் நடிகர் விக்ரம் பெருமிதம்

Published By: Nanthini

01 Nov, 2023 | 06:00 PM
image

விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான 'தங்கலான்' திரைப்படத்தின் டீசர் இன்று (01) காலை வெளியானது. இந்த படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் நடிகர் விக்ரம் பேசுகையில், 

வரலாற்றில் இருக்கும் நல்ல விடயங்களை கொண்டாட வேண்டும். கெட்ட விடயங்களை மறக்கக்கூடாது. அது இனியும் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ரஞ்சித் மிக அழகாக கதைக்களத்தை விவரித்தார். சில விஷயங்களை நாம் மறந்துவிடுகிறோம். அப்படி நாம் மறந்ததை சித்திரித்திருக்கிறோம். அந்த காலகட்டத்தில் வாழ்ந்த சமூகத்தினரின் வாழ்வியலை பேசும் இப்படம் நம்மை அழ வைத்து சோகத்தை பிழியாமல் நிகழ்வுகளை யதார்த்தமாக பேசும் படைப்பாக இருக்கும். 

கே.ஜி.எப்.இல் தங்கியிருந்து படப்பிடிப்பை நடத்தினோம். காலையில் அவ்வளவு வெப்பமாகவும் இரவில் அப்படியொரு குளிரும் இருக்கும். வெறும் கோவணத்தை கட்டிக்கொண்டு நடிக்க வேண்டியிருந்தது. 'ஒரு தேள் கொண்டுவாடா' என ரஞ்சித் சொன்ன 10 நிமிடத்தில் தேள் இருக்கும். 'பாம்பு கொண்டு வா' என்றால் 5 நிமிடத்தில் பாம்பு இருக்கும். எங்கு பார்த்தாலும் பாம்பு, தேள்கள் உலாவும் இடம் அது. அப்படியான இடத்தில் செருப்பு இல்லாமல், பார்த்து பார்த்து நடந்தோம். அப்போதுதான் அந்த இடத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை உணர்ந்தோம். என்னுடைய உடை தொடங்கி தோற்றம் எல்லாமே அவர்களின் வாழ்வியல்தான். மேக்கப்புக்கு மட்டும் 4 - 5 மணி நேரம் ஆகும். படப்பிடிப்பு தளத்துக்கு சென்ற பிறகு கோவணத்தை கட்டிக்கொண்டு கதாபாத்திரமாவே மாறிவிடுவோம். 

முதன் முதலாக நான் லைவ் சவுண்டில் நடித்திருக்கிறேன். இதனால் உச்சரிப்பு, அதற்கான டோன், அந்த காலத்தின் பேச்சுவழக்கு தொடங்கி எல்லாவற்றையும் கவனித்து நடிக்க வேண்டும். சில சமயம் நடிக்கும்போது குரலில் மாற்றத்தை கொண்டுவரும்போது, அதற்கேற்ப முகபாவனை ஒத்துப்போகாது. இரண்டையும் சரிவர கவனிக்க வேண்டும். பெரும்பாலான ஷொட்கள் சிங்கிள் ஷொட்கள் தான். கெமரா சுற்றிக்கொண்டே இருக்கும். ஒரு தடவை மிஸ்ஸானால் மீண்டும் தொடக்கத்திலிருந்து நடிக்க வேண்டும். ரஞ்சித்தம் எங்களுக்காக படப்பிடிப்பில் கோவணத்துடன் தான் இருந்தார். 

முந்தைய நாள் எப்போடா முடியும் என இருக்கும். அடுத்த நாள் வாங்க ஷூட்டுக்கு போவோம் என ஆர்வத்துடன் இருப்பேன். இப்படியான உணர்வை நான் எந்தப் படத்திலும் சந்தித்தது இல்லை. நன்றி ரஞ்சித். அந்த கதாபாத்திரத்துடன், வாழ்வியலுடன் வாழ்ந்துவிட்டு கார், விமானத்தில் செல்லும்போது ஏதோ வித்தியாசமான உணர்வாக இருக்கும். இந்த படம் மேக்கிங் அளவில் ரஞ்சித்தின் சார்பட்டாவை விட 100 மடங்கு சிறப்பாக இருக்கும். 

ரஞ்சித்துடன் பணியாற்றியது மிகச் சிறந்த அனுபவம். தொடக்கத்தில் 2, 3 நாட்கள் ஒரு மாதிரி இருந்தது. பிறகு சிங்க் ஆகிவிட்டேன். அவரின் ஒவ்வொரு பிரேமும் அழகாக இருக்கும். சிறப்பான இயக்குநர் ரஞ்சித். நீங்கள் கணிப்பதை தாண்டி, இந்த படம் வேற மாதிரியான படமாக இருக்கும். நான் இதுவரை நடித்த பிதாமகன், ஐ. ராவணன் ஆகிய படங்களில் தான் கஷ்டப்பட்டு நடித்தேன். ஆனால், தங்கலானை ஒப்பிடுகையில், அதெல்லாம் 3 சதவீதம் தான் என அவர் தெரிவித்தார்.  

'தங்கலான்' படம் எதிர்வரும் ஜனவரி மாதம் 26ஆம் திகதி தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகும் என கூறப்படுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகை லிஜோமோல் ஜோஸ் நடிக்கும் 'ஜென்டில்வுமன்'...

2025-02-19 17:59:57
news-image

தந்தைக்கும்- மகனுக்கும் இடையே உள்ள உறவு...

2025-02-19 17:56:26
news-image

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட பிரேம்ஜியின்...

2025-02-19 17:56:47
news-image

'டீசல்' படத்திற்காக ஹரீஷ் கல்யாணுடன் கரம்...

2025-02-19 17:41:26
news-image

அஜித் குமாருடன் மீண்டும் இணைந்திருக்கும் சிம்ரன்

2025-02-19 17:39:36
news-image

அருண் பாண்டியன் - கீர்த்தி பாண்டியன்...

2025-02-19 16:53:13
news-image

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த '2K லவ்...

2025-02-18 17:47:19
news-image

'ரைசிங் ஸ்டார்' துருவ் விக்ரம் நடிக்கும்...

2025-02-18 17:40:00
news-image

'மதராஸி'யாக மிரட்டும் சிவகார்த்திகேயன்

2025-02-17 17:33:46
news-image

விஜய் சேதுபதி - லோகேஷ் கனகராஜ்...

2025-02-17 17:38:15
news-image

ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையால்...

2025-02-17 16:27:34
news-image

யோகி பாபு நடிக்கும் 'லெக் பீஸ்...

2025-02-17 16:32:01