ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 : மாற்றங்களை எதிர்கொள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார்?

02 Nov, 2023 | 12:51 PM
image

நவ கிரகங்களில் நிழல் கிரகங்கள் என்று கூறப்படும் பாம்பு கிரகங்களான ராகு கேது பெயர்ச்சி மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சக்தி வாய்ந்த கிரகங்களான ராகுவும் கேதுவும் மீன ராசிக்கும் கன்னி ராசிக்கும் இடப்பெயர்ச்சியடைந்து விட்டன. தற்போது ராகுவும் கேதுவும் நல்ல இடத்திற்கு மாறியுள்ளனர். 18 மாதங்கள் கொண்ட இந்த இடப்பெயர்ச்சியால் 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் என்ன மாற்றம் நடக்கபோகின்றது என இந்த பதிவில் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் இத்தனை நாள் பட்ட கஷ்டத்திற்கு எல்லாம் இனி விடிவுகாலம் பிறக்கும். காசு சம்பந்தப்பட்ட பிரச்சனையால் தலைமறைவாக வாழ்ந்தவர்களுக்கு கூட இனிவரும் காலகட்டத்தில் விபரீதமான ராஜ யோகங்கள் உண்டாகும். தன்னம்பிக்கை ஊற்றெடுக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு, நல்ல வாய்ப்புகள், புகழ் என வெற்றி காண்பீர்கள். உங்களுக்கு இனி வரும் காலம் அற்புதமான காலம் தான்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி சிறப்பாக அமைந்திருக்கின்றது. பணவரவு அதிகரிக்கும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் இருக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி, சந்தோஷம் நிலவும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சனைகள் சரியாகும். இனி உங்களுக்கு அதிரடி முன்னேற்றமும் எதையும் சாதிக்கும் திறமையும் உண்டாகும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி நல்ல யோகத்தை தான் கொடுக்கப் போகின்றது. உங்களின் புதிய முயற்சிகள் சிறப்பாக வெற்றி அடையும், தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வீட்டில் சுபகாரியங்கள் இனி நடக்கும். பிரபலங்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் உதவியும் கிடைக்கும். நீங்கள் இனி தைரியமாக எல்லா விஷயத்திலும் முடிவு எடுக்கலாம்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இப்போது தோல்விகள் அனைத்தும் வெற்றிகளாக மாறக்கூடிய நேரம் வந்துவிட்டது. இனிமேல் ஏற்றங்கள் நிறைந்த நாட்களாக தான் அமையும். தம்பதிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். உறவுகள் இனி உங்களை தேடி வரும். பணவரவு கிட்டும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள் அவர்களின் உதவியும் கிடைக்கும். உங்களின் வெளிநாட்டுக்கு கனவு நிறைவேறும். உங்களுக்கு இனி வரும் காலம் வசந்த காலம் தான்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இனி ஓரளவு நிம்மதி கிடைக்கும். எந்த ஒரு விஷயத்திலும் நிதானமாக செயற்பட வேண்டும். கணவன் மனைவிக்குள் ஏற்படும் பிரச்சினையை உடனே பேசி தீர்த்துக் கொள்ளவும். குடும்ப விஷயங்களைப் பற்றி வெளிவட்டாரங்களில் பகிர வேண்டாம். வேலைச்சுமை அதிகரிக்கும். ஆரோக்கியம் மற்றும் வேலை செய்யும் இடத்தில் கவனம் தேவை. ராகு கேதுவை தரிசனம் செய்து பரிகாரம் செய்து கொள்ளுங்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியானது அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இனி உற்சாகத்துடன் வலம் வருவீர்கள். தம்பதிக்குள் சந்தோஷம் நிலைக்கும். வருமானம் அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். தொழில் முன்னேற்றம் இருக்கும். அவ்வப்போது தலைச்சுற்றல், ஒற்றைத் தலைவலி, காய்ச்சல், தூக்கமின்மை, முன்கோபம், களைப்பு வந்து நீங்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியானது சிறப்பான முன்னேற்றம் தரக்கூடிய பெயர்ச்சியாக தான் அமையும். எதிலும் முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பூர்வீக சொத்து உங்கள் கைக்கு வந்து சேரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிட்டும். எனினும் பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இனி வர கூடிய காலகட்டம் ஏற்றம் தரக்கூடிய காலமாகத்தான் இருக்கும். எதிலும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் குதூகலம் பிறக்கும். பணவரவு அதிகரிக்கும். எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி கிடைக்கும். சொந்த தொழிலில் முன்னேற்றம் இருக்கும். நிம்மதியான தூக்கம் கிடைக்கும். உங்களைச் சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை அறிவீர்கள். உடல்நலத்தில் கவனம் தேவை.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி மன நிம்மதியை கொடுக்கப் போகின்றது. நண்பர்கள்இ உறவினர்களுடன் சுமுக உறவு ஏற்படும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். கோபத்தை குறைத்துக் கனிவாகப் பேசுங்ளுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இனி உங்கள் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்படபோகின்றது. யாரையும் பற்றி விமர்சனம் செய்ய வேண்டாம்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி நல்ல உற்சாகத்தை கொடுக்கப் போகின்றது. சவாலான விஷயங்களையும் தைரியமாக முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். பண வரவு உண்டு. உங்களின் நட்பு வட்டம் விரியும். நண்பர்களின் உதவி கிட்டும். பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. முன்கோபத்தை குறைத்துகொள்வது மிகவும் உத்தமம். இனி உங்களுக்கு எங்கும் எதிலும் முதல் மரியாதை கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் இந்த ராகு கேது பெயர்ச்சியில் அமைதியாக இருந்தால் தான் மட்டுமே சாதிக்க முடியும். பேச்சில் நிதானம் தேவை. முன்கோபத்தை குறைக்கப்பாருங்கள். மனைவியிடம் விட்டுக் கொடுத்து போகவும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. செலவுகள் அதிகரிக்கும். கொஞ்சம் அலைச்சல் இருந்தாலும் மன நிம்மதியுண்டு. ஜாமீன் கையெழுத்து போடக்கூடாது. பணம் சம்பந்தப்பட்ட கொடுக்கல் வாங்கல்களில் கவனம் தேவை.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி பேச்சில் இனி முதிர்ச்சி கொடுக்கும். உங்களிடம் திறமைகள் வெளிப்படும். பணவரவு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு வெளிநாட்டுக்கு போகக்கூடிய யோகம் இருக்கிறது. குடும்ப விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். முக்கிய வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. அடுத்து ஒன்றரை வருட காலம் நீங்கள் அடுத்தவர்களை முழுமையாக நம்பி எதையும் செய்யாமல் இருந்தால் ஏமாற்றத்திலிருந்து தப்பிக்கலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தீபம் ஏற்றுவதில் கவனம் தேவையா..?

2025-01-24 16:44:40
news-image

வெற்றியை உண்டாக்கும் மந்திர வழிபாடு

2025-01-23 16:12:37
news-image

பாவங்கள் நீக்குவதற்கான எளிய வழிமுறை..!?

2025-01-22 17:24:15
news-image

உங்களுக்கு கூர்ம யோகம் இருக்கிறதா..!?

2025-01-21 15:49:42
news-image

அபிஷேகம் செய்வதன் மூலம் பலன் பெறுவது...

2025-01-20 17:52:05
news-image

கடன் சுமை குறைவதற்கான எளிய பரிகாரம்...!?

2025-01-18 22:11:20
news-image

வருவாயை அதிகரித்துக் கொள்வதற்கான சூட்சுமமான வழிமுறை..!?

2025-01-17 17:01:03
news-image

தொழிலில் ஏற்படும் தடையை நீக்குவதற்கான எளிய...

2025-01-16 20:12:57
news-image

செல்லப் பிராணியை எப்போது வாங்கலாம்?

2025-01-15 17:39:12
news-image

ஒவ்வொருவரும் நாளாந்தம் பின்பற்ற வேண்டிய ஆன்மீக...

2025-01-13 15:56:39
news-image

குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கு எளிமையான வழிமுறை..!?

2025-01-09 15:26:03
news-image

எதிர்மறை ஆற்றலை அழித்து செல்வத்தை குவிக்கும்...

2025-01-08 19:26:11