மன்னாரில் சுகாதார சேவை ஊழியர்கள் போராட்டத்தில்

Published By: Vishnu

01 Nov, 2023 | 03:39 PM
image

சுகாதார சேவைகள் சங்கத்துடன் இணைந்து ஸ்ரீ லங்கா ஜனரஜ சுகாதார சேவைசங்கமும் இணைந்து பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்தியபோது மன்னார் மாவட்ட சங்கத்தின் ஊழியர்களும் இப்போராட்டத்தில் குதித்திருந்தனர்.

இப் போராட்டமானது புதன்கிழமை (01) மன்னாரில் காலை 6 மணித் தொடக்கம் நண்பகல் 12 மணிவரை வைத்தியசாலைகளுக்கு முன்னால் இடம்பெற்றன.

மன்னார் மாவட்டத்தில் சுமார் ஐந்நூறு ஊழியர்கள் இந்த போராட்டத்தில் குதித்திருந்தனர்.

இவர்கள் முன்வைத்திருந்த கோரிக்கைகளாக சுகாதார ஊழியர்களுக்கு கிழமையில் ஐந்து நாட்களை வேலை நாட்களாக அமுல் படுத்துமாறும்,

மத்திய மற்றும் மாகாண அமைச்சின் கீழ் சேவைபுரியும் சுகாதார ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவை வரையறையின்றி வழங்க வேண்டும் என்றும், தற்பொழுது வழங்கப்படும் விஷேட கொடுப்பனவாக வழங்கப்படும் 1000 ரூபாவை 7000 ரூபாவாக உயர்த்த வேண்டும் என்றும், சீறுடைக்கான கொடுப்னவை 15 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்றும் .

வட மாகாணத்தால் சுகாதார சேவைகள் ஊழியர்கள் பற்றாக் குறையாக காணப்படுவதால் இதனை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும், நோயாளர்களுக்கான மருந்து வகைகள் சீராக கிடைக்கப்பெற ஆவண செய்ய வேண்டும் என்றும் அத்துடன் உயர்ந்து வரும் மின்சாரக் கட்டணைத்தை செலுத்த முடியாது இருப்பதால் இதை குறைக்க வேண்டும் என்றும், வட மாகாணத்தில் நடைபெறும் இடம் மாற்றத்தில் தூர இடங்களில் சேவை புரியும் எமது ஊழியர்கள் பொருளாதார கஷ்டத்திலும் பாரிய பிரச்சனைகளுக்கு உள்ளாகி வருவதால் இயன்றயளவு இவர்கள் விரும்பும் இடங்களுக்கு இடம் மாற்றம் செய்யும்படியும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே  மன்னார் குறிப்பாக வட மாகாணத்தில் இப்போராட்டத்தில் குதித்தாக  ஸ்ரீ லங்கா ஜனரஜ சுகாதார சேவை சங்க மன்னார் மற்றும் வடமாகாண சங்கங்களின் தலைவர் எஸ்.எச்.எம்.இர்ஹான் இவ்வாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக...

2025-01-14 13:54:39
news-image

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு...

2025-01-14 13:39:17
news-image

நவகமுவ பகுதியில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

2025-01-14 13:15:19
news-image

பமுனுகமவில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது...

2025-01-14 13:06:21
news-image

பதுளையில் ரயிலில் மோதி ஒருவர் பலி!

2025-01-14 11:03:45
news-image

நீர்கொழும்பில் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது

2025-01-14 10:50:53
news-image

அத்துருகிரியவில் சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் இருவர்...

2025-01-14 10:35:01
news-image

வெள்ளவத்தையில் ரயிலில் மோதி பெண் உயிரிழப்பு!

2025-01-14 10:24:58
news-image

சீனா சென்றடைந்தார் ஜனாதிபதி அநுர

2025-01-14 10:24:11
news-image

அரசியல் கைதிகளென எவரும் தடுத்து வைக்கப்படவில்லை...

2025-01-13 18:03:53
news-image

இன்றைய வானிலை 

2025-01-14 06:20:58
news-image

இலங்கைக்கும் உலகுக்கும் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு...

2025-01-13 17:21:39