2016 ஆம் ஆண்டில் தனது அரு­மை­யான வரி­களால் அலங்­க­ரிக்­கப்­பட்ட மூன்று பாடல்­க­ளையும் 2017 ஆம் ஆண்டின் ஆரம்­பத்தில் நவீன தொழில்­நுட்ப வார்த்­தை­களின் கோர்­வை­களை கொண்ட வரி­க­ளினால் ஒரு பாட­லையும்  வெளி­யிட்­டு­விட்டு அமைதி காக்­கின்றார் கவி­ஞரும் பாட­லா­சி­ய­ரு­மான பொ. பாலச்­சந்­திரன்.

‘உயிர் என்னுள் உன்னை தேடுதே ஏன் சொல்லு நீ... இதழ் கலைக்க முடி­யாத மௌனமாய் ஏன் இன்று நீ...’, ‘வாழ்க்கை உன் தேடலின் வாசற்­படி வெற்றி அதை தேடும் வேகம் தனில்...’, ‘வெள்ளை காகிதம் நான் வரியாய் மாறினேன் போகும் திசை எல்லாம் நிழலாய் மாறுவேன்...’ ‘வாடி வாடி வாடி ஐபோன் அழகி டெய்லி யூதும் தேடும் வட்ஸ்அப் பெண்­மணி...’ இவை­கள்தான் பாலச்­சந்­திரன் எழு­திய பாடல்கள்.

இப்­பா­டல்­களை நம்மில் சிலர் தனியார் வானொ­லி­களில் ஒலிக்க கேட்­டி­ருப்­பார்கள். சிலர் சமூக வலைத்­த­ளங்­க­ளிலும் கேட்­டி­ருக்கக் கூடும். இதன் எண்­ணிக்கை மிக சிறி­யதே.

இப்­படி எத்­த­னையோ கலை­ஞர்கள் இலை மறை காய்­க­ளாக இருந்தும் இல்­லா­தது போலவே காலப் போக்கில் காணாமல் போய்­வி­டு­கின்­றனர். முயற்­சி­யுள்ள யாரோ சிலர் மட்­டுமே சாதிக்­கின்­றனர்.

எப்­ப­டி­யா­வது தனது வாழ்­நாளில் தேசிய விருது ஒன்­றினை பெற்­று­விட வேண்டும் என தெரி­விக்கும் பாட­லா­சியர் பாலச்­சந்­தி­ரனைப் பற்றி பார்ப்போம்...

பாலச்­சந்­திரன் கொழும்பு, கொட்­டாஞ்­சே­னையை சேர்ந்­தவர். தற்­போது தனது தொழில் கார­ண­மாக மத்­திய கிழக்கு நாடான சவூதி அரே­பி­யாவில் வசித்து வரு­கின்றார்.

நாவ­லப்­பிட்டி கதி­ரேசன் மத்­தியக் கல்­லூரி, கொட்­டாஞ்­சேனை புனித லூசியஸ் கல்­லூரி மற்றும் பம்­ப­லப்­பிட்டி இந்து கல்­லூ­ரியின் பழைய மாண­வ­ரான இவர் தனது பாட­சாலை காலங்­க­ளி­லேயே கவிதை, கட்­டுரை, சிறு­கதை போன்ற ஆக்­கங்­களை எழு­தி­னாலும் கூட அவ­ரது மனதும் எண்­ணங்­களும் என்­னவோ கவி­தை­க­ளி­லேயே தடுக்கி நின்­றன.

2000 ஆம் ஆண்டு தனது பாட­சாலை நாட்­களில் இளமைத் துடிப்­புடன் கூடிய பல கவி­தை­களை எழுதி பலர் மன­தையும் கவர்ந்­த­துடன் அந்த இசைக்கு ‘என் மனம் பேசும் பெண் பூவே ஒரு வார்த்தை பேசு...’ என ஆரம்­பிக்கும் அழ­கிய வரி­க­ளா­லான பாடல் ஒன்­றினையும் எழு­தி­யுள்ளார். இது பாட­சாலை காலத்­தோடு நின்­று­விட்­டது.

எனினும் தென்­னிந்­திய சினிமா பாடல்­களின் வரி­களால் ஈர்க்­கப்­பட்ட இவர் தானும் பாடல்கள் எழுத வேண்டும் என எண்­ணினார். அதன்­படி 16 வரு­டங்­களின் பின்னர் பாடல் எழு­து­வ­தற்­கான சந்­தர்ப்பம் கிடைத்­தது. 

அப்­படி அவர் எழு­திய பாடல்தான் ‘உயிர் என்னுள் உன்னை தேடுதே ஏன் சொல்லு நீ... இதழ் கலைக்க முடி­யாத மௌனமாய் ஏன் இன்று நீ...’ என்ற பாடல். இப்­பா­டலை 45 நிமி­டங்­களில் எழுதி முடித்­துள்ளார். இப்­பாடல் சமூக வலைத்­த­ளங்­களில் ரசி­கர்­க­ளிடம் பெரும் வர­வேற்பை பெற்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

தென்­னிந்­திய பாடல்­க­ளுக்கு இணை­யாக இப்­பாடல் அமைந்­துள்­ள­தாக ரசி­கர்­களால் பாராட்­டப்­பட்ட அதே­வேளை தென்­னிந்­திய பாட­லா­சி­ரி­ய­ரான கவிஞர் வைர­பா­ரதி மிக அரு­மை­யான வரி­களை கொண்ட பாடல் அதிலும் ‘வாழ்ந்­தி­டுவேன்... உன்னை சேர்­ந் ­தி­டுவேன்... உன் பால் மனதை நான் காய்ச்­சி­டுவேன்...’  ஆகிய வரி­களை மிக அரு­மை­யா­னவை. தொடர்ந்து எழு­துங்கள் என பாராட்­டி­யுள்ளார்.

பாட­லா­சி­ரியர் பாலச்­சந்­திரன் சவூதி அரே­பி­யாவில் இருந்­த­போதும் கலைத்­து­றை­யு­ட­னான தொடர்பை விட­வில்லை. மும் மொழி­க­ளிலும் தேர்ச்சி பெற்ற இவர் மிக விரைவில் சவூதி அரே­பி­யாவில் நம் நாட்டு மக்­களின் துய­ரங்கள், வாழ்க்கைப் போக்கு பற்­றிய பாட­லொன்­றினை சகோ­தர மொழியில் எழுதி வெளி­யிட திட்­ட­மிட்­டுள்­ள­தாக தெரி­வித்­துள்ளார்.

அத்­துடன் தனது மேகா புரடக்‌ஷனால் தனது திரைக்கதை இயக்கத்தின் மூலம் குறுந் திரைப்படம் ஒன்றினை இயக்கப் போவதாக தெரிவித்துள்ள இவர் எதிர்காலத்தில் கலைத்துறையில் ஆர்வமுடைய புதிய இளம் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.