மேஷம்
வாழ்க்கைக்கு தேவையான வசதிகளை உருவாக்கிக்கொள்ளும் மேஷ ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ஜென்ம குரு பார்வை செய்யுமிடம் சிறப்பாக அமையும். ராசிநாதன் பார்வை பெறுவதால் உங்களின் பலம் அதிகரிக்கும். வெளிநாட்டு தொழில், வெளிநாட்டுப் பயணம் வாய்க்கும். எதையும் எதிர்பாராமல் செயற்படும் வலிமை பெறுவீர்கள். வரவேண்டிய தொகைகள் வசூலாகும். கிடைத்த வேலையை தக்க வைத்துக்கொள்வீர்கள்.
முக்கிய பிரமுகர் சந்திப்பு உங்களை ஊக்கப்படுத்தும். தொழில் ஸ்தானத்தில் சனி அமர்ந்திருப்பதால் இதுவரை வேலையின்றி இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். விளையாட்டுத்துறையில் மேன்மை அடைவீர்கள். பொருளாதாரம் சிறக்கும்.
சந்திராஷ்டம நாட்கள் : 13.11.2023 திங்கள் இரவு 10.25 முதல் 16.11.2023 வியாழன் அதிகாலை 04.25 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள் : ஒரெஞ்ச், வெண்மை, மஞ்சள்.
அதிர்ஷ்ட திசைகள் : கிழக்கு, வடமேற்கு, தெற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள், செவ்வாய், புதன்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள் : செவ்வாய்க்கிழமைகளில் சுப்ரமணியருக்கு சிவப்பு நிறப் பூ வைத்து, நெய் தீபமிட்டு வணங்கி வேண்டுதலைச் சொல்லிவர சகல நன்மைகளும் உண்டாகும்.
ரிஷபம்
லட்சியத்தை அடைய விடாமுயற்சி செய்து வரும் ரிஷப ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் சுகஸ்தானத்தில் அமர்ந்து தொழில் ஸ்தானத்தைப் பார்வையிடுவதுடன் ராசியில் சந்திரன் உச்சம் பெறுவதால் உங்களின் தொழில் வளர்ச்சி பெறுவதுடன் கூட்டுத் தொழிலில் மேன்மையும் உண்டாகும்.
லாபஸ்தானத்தில் அமர்ந்த ராகு உங்களுக்கு வெளிநாட்டு வேலையிலிருந்து வந்த கஷ்டங்களை போக்கி வளம் பெறச் செய்வார். பஞ்சம ஸ்தானத்தில் கேது உங்களின் முயற்சிகளுக்குத் தடையைத் தருவார். எதிலும் சிரமத்தைக் குறைத்து வெற்றியைப் பெற உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
முக்கிய தொழில் சார்ந்த வெளியூர் பயணம் நன்மை தரும். கலைத்துறையினர் எதிர்பார்த்த வளர்ச்சியை பெறுவீர்கள். முக்கிய நிறுவனங்களில் ஒப்பந்தம் பெறுவீர்கள். பொது வாழ்விலும் அரசியலிலும் உங்களின் தனிப்பட்ட செல்வாக்கு உயரும்.
சந்திராஷ்டம நாட்கள்: 16.11.2023 வியாழன் அதிகாலை 04.27 முதல் 18.11.2023 சனி காலை 08.21 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள் : வெண்மை, பச்சை, ஒரெஞ்ச்.
அதிர்ஷ்ட திசைகள் : தெற்கு, தென்கிழக்கு, மேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள் : செவ்வாய், புதன், வெள்ளி.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள் : வியாழக்கிழமை காலை 6, 7 மணிக்கு நவக்கிரக குருவுக்கு நெய் தீபம் ஏற்றிவர உங்களின் வாழ்க்கைத் தேவைகளுக்கு உரிய பொருளாதாரம் கிடைக்கும்.
மிதுனம்
மனத்துக்கு எது தெளிவானதோ அது நடக்க செயற்படும் மிதுன ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு அட்டம சனி அமர்ந்து தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பது ஏற்கனவே இருந்துவரும் பாதிப்பு நிலையைச் சரி செய்து தருவதாக அமையும். வக்கிர பலன் நன்மை தரும்.
மேலும் உங்களின் ராசிக்கு லாப ஸ்தானத்தில் தொழில் ஸ்தானாதிபதி குரு அமர்வதால் உங்களின் தொழிலில் நல்ல லாபகரமான சூழ்நிலை உருவாகும். அதிக தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டிவரும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சிகள் செய்துவரும் அன்பர்களுக்கு வேலை கிடைக்கவும் விசா கிடைக்கவும் வழி கிடைக்கும்.
தனிப்பட்ட செல்வாக்குகளை நீங்கள் உருவாக்கிக்கொள்வீர்கள். பொது ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு உங்களின் திறமையை வளர்த்துக்கொள்வீர்கள். கலைத்துறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டம நாட்கள் : 16.11.2023 வியாழன் அதிகாலை 04.27 முதல் 18.11.2023 சனி காலை 08.21 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள் : பச்சை, மஞ்சள், நீலம்.
அதிர்ஷ்ட திசைகள் : மேற்கு, வடமேற்கு, கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள், புதன், வியாழன்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள் : சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடு செய்து தீபம் ஏற்றி துளசி மாலை அணிந்து வேண்டிக்கொள்ள சகல காரியங்களிலும் நன்மை உண்டாகும்.
கடகம்
காலத்தை வீணடிக்காமல் செயற்பட்டு வரும் கடக ராசி வாசகர்களே!
உங்களின் ராசிக்கு இம்மாதம் முழுவதும் வக்கிர சனி பார்வையால் வெளிநாடு செல்லவிருந்த தடைகள் நீங்கும். சுமையாக இருந்துவந்த சில பிரச்சினைகளுக்கு தீர்வுகளுக்கான நல்ல வாய்ப்பு அமையும்.
குடும்பத்தில் சச்சரவுகள் நீங்கி சுபீட்சம் உண்டாகும். அரசியலில் உங்களின் மதிப்பை தக்கவைத்துக்கொள்வீர்கள். சகோதரர்கள் மூலம் சிலருக்கு அனுகூலமான காரியங்கள் நடக்கும். பொது விடயங்களில் தைரியத்துடன் ஈடுபடுவீர்கள். திறமையை வளர்த்துக்கொண்டு செயலில் விடாமுயற்சி செய்து நன்மை அடைவீர்கள்.
கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் தேடி வரும். தொழிலில் போட்டிகள் இன்றி தொடர்ந்து நடக்கும். தாயார் உடல் நிலை முன்னேற்றம் தரும். பொருளாதாரம் சமநிலையில் இருக்கும்.
சந்திராஷ்டம நாட்கள் : 20.11.2023 திங்கள் பகல் 11.04 முதல் 22.11.2023 புதன் பகல் 01.24 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள் : வெண்மை, நீலம், ஒரெஞ்சு.
அதிர்ஷ்ட திசைகள் : வடக்கு, வடமேற்கு, தென்கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள், செவ்வாய், வெள்ளி.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள் : வியாழக்கிழமைகளில் 6, 7 மணிக்கு விநாயகருக்கு எருக்குப் பூ மாலை அல்லது வெள்ளை நிற மாலை அணிவித்து விளக்குப் போட்டு வேண்டிக்கொள்ள உடனே நினைத்தது நிறைவேறும்.
சிம்மம்
வெற்றிப் பாதையில் விரைந்து செயற்படும் சிம்ம ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசி குருவின் பார்வை பெறுவதாலும் தொழில் ஸ்தானாதிபதி சுக்கிரன் ராசியில் அமர்ந்து ஏழாமிடத்தைப் பார்ப்பதாலும் திருமண வாய்ப்புகள் அமையும். அரசியல் பிரமுகர்கள் திருமண நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள்.
அரசியலில் புதிய திருப்புமுனைகளை சந்தித்து வருவீர்கள். உங்களை நம்பியவர்களை உடன் இருந்து வளப்படுத்தி வருவீர்கள். திறமையை வளர்த்துக்கொள்வீர்கள். எதிலும் நீங்கள் முன்னுரிமை கொடுத்து நேரடியாக செயற்படுவதன் மூலம் நன்மையை அடைவீர்கள்.
திட்டமிட்ட சில செயற்பாடுகளை திறம்பட செய்து ஏற்றம் பெறுவீர்கள். சிலர் உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டம நாட்கள் : 22.11.2023 புதன் பகல் 01.25 முதல் 24.11.2023 வெள்ளி மாலை 04.18 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள் : சிவப்பு, மஞ்சள், வெண்மை.
அதிர்ஷ்ட திசைகள் : கிழக்கு, தென்கிழக்கு, மேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, திங்கள், வியாழன்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள் : வியாழக்கிழமைகளில் காலை 6, 7 மணிக்கு விநாயகர் வழிபாடு செய்து, தேங்காய் எண்ணெய் தீபமேற்றி வணங்கிவர அனைத்து காரியங்களும் வெற்றியைத் தரும்.
கன்னி
தயக்கமின்றி எதையும் செய்து வெற்றி பெறும் கன்னி ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் ஸ்தானத்தில் அமர்வதும் தன ஸ்தானத்தைப் பார்வையிடுவதும் உங்களின் தேவைகளுக்கான பொருளாதார வளர்ச்சியைத் தரும்.
கடந்த காலங்களில் பல்வேறு பிரச்சினைகள் வந்து தடையேற்படுத்தி இருந்தாலும், இனி படிப்படியாக செயலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். அலுவலகத்தில் சிலருக்குப் பிரச்சினை இருந்துவரும் நிலையில் நல்ல மாற்றம் ஏற்பட்டு அதிலிருந்து விடுபடுவீர்கள்.
சாதாரணமான விடயத்தை கூட உன்னிப்பாக கவனித்துச் செய்வீர்கள். முக்கிய பிரமுகரின் சந்திப்பு உங்களை ஊக்கப்படுத்தும். எதிலும் வளர்ச்சிப் பாதையில் சென்று நன்மையை அடைய வாய்ப்புகள் அமையும். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளைப் பெற்று வளம் பெறுவீர்கள்.
சந்திராஷ்டம நாட்கள் : 24.11.2023 வெள்ளி மாலை 04.19 முதல் 26.11.2023 ஞாயிறு இரவு 08.34 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள் : பச்சை, மஞ்சள், ஒரெஞ்சு.
அதிர்ஷ்ட திசைகள் : தெற்கு, தென்மேற்கு, வடக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள் : புதன், வியாழன், சனி.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள் : நவக்கிரக குருவுக்கு வியாழக்கிழமைகளில் நெய் தீபமிட்டு மஞ்சள் நிறப் பூ வைத்து வேண்டிக்கொள்ள தடைகள் நீங்கி நன்மைகள் உண்டாகும்.
துலாம்
திடமான நம்பிக்கையுடன் எதையும் செய்யும் துலாம் ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வை பெறுவதும் ராசிநாதன் லாப ஸ்தானத்தில் அமர்வதும் நற்பலன்களையும், பொருளாதாரத்தில் வளர்ச்சியையும் தரும். வெளிநாடு சம்பந்தமான தொடர்புகள் நல்ல பலனை பெறச் செய்யும். திரும்பப் பெறவேண்டிய சில காரியங்களில் ஏதாவது தடைபட்டு விலகும்.
அர்த்தாஷ்டம சனி இன்னும் விலகாத நிலையில் சனி உங்களுக்கு கும்பத்துக்கு செல்வதற்கு முன் ஏதாவது செய்துவிட்டு செல்வார். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பால் சிலருக்கு திடீர் வளர்ச்சி உண்டாகும். திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்கும். தொழிலில் போட்டிகள் இருந்தாலும் உங்களுக்கு பெரிய பாதிப்பைத் தராது. கலைத்துறையினருக்கு கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு அமையும்.
சந்திராஷ்டம நாட்கள் : 26.11.2023 ஞாயிறு இரவு 08.35 முதல் 28.11.2023 செவ்வாய் இரவு 02.56 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள் : வெண்மை, மஞ்சள், பச்சை.
அதிர்ஷ்ட திசைகள் : மேற்கு, வடமேற்கு, கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள் : புதன், வியாழன், வெள்ளி.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள் : சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரின் வழிபாடும், வைரவர் வழிபாடும் செய்துவர உங்களின் காரிய தடை நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள்.
விருச்சிகம்
உங்களின் இலக்கை அடைய எதையும் செய்யும் விருச்சிக ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் விரயத்தில் அமர்ந்து மூன்றாமிடத்தைப் பார்ப்பது உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக அமையும். வெளியில் கடன் பெறும் முயற்சிகளால் வளம் பெறச் செய்யும்.
முக்கிய காரியங்களில் உங்களின் ஈடுபாடுகள் மூலம் மேன்மை அடையும். உங்களுக்கு தொழிற்சங்கத்தில் முக்கியத்துவம் பெறும் சூழ்நிலை உண்டாகும். அதிக அலைச்சல் இருந்தாலும் உங்களின் செயலில் தோய்வு இருக்காது.
மருத்துவத்துறையில் இருப்பவர்களுக்கு சில சவால்கள் நிறைந்த சூழ்நிலையிலும் அதை வெற்றிகரமாக முடிப்பீர்கள். விளையாட்டுத்துறையில் முன்னேற்றம் காண்பீர்கள். பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தருவீர்கள். வேலை தேடுபவருக்கு விரைவில் நல்ல வேலை கிடைக்கும். தொழிலில் சுமாரான முன்னேற்றம் உண்டாகும்.
சந்திராஷ்டம நாட்கள் : 01.11.2023 புதன் இரவு 07.24 முதல் 04.11.2023 சனி அதிகாலை 04.29 மணி வரையும், 28.11.2023 செவ்வாய் இரவு 02.57 முதல் 07.12.2023 வெள்ளி பகல் 11.51 மணி வரையும்.
அதிர்ஷ்ட நிறங்கள் : வெண்மை, நீலம், சிவப்பு.
அதிர்ஷ்ட திசைகள் : வடக்கு, வடகிழக்கு, தெற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள் : வெள்ளி, சனி, ஞாயிறு.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள் : ஞாயிறு மாலை 04.30 - 06.00 மணிக்கு ராகு காலத்தில் நவக்கிரக வழிபாடு, வைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமிட்டு வர சகல தடைகளும் நீங்கும்.
தனுசு
தனக்கென்று தனித் திறமையை வளர்த்துக்கொள்ளும் தனுசு ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசி குரு பார்வை பெறுவதும் வக்கிர சனியின் நிலையும் நற்பலன்களை பெற்றுத் தரும். இதுவரை நிறைவேறாமல் இருந்த காரியம் கைகூடும்.
லாப ஸ்தானத்தில் உங்கள் யோகாதிபதியுடன் பஞ்சமாதிபதி செவ்வாயும் தொழில் ஸ்தானாதிபதி புதனும் இணைந்து பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்ப்பதால் உங்களுக்கு கிடைக்கவேண்டிய தடைப்பட்ட காரியங்கள் சிறப்பாக அமையும்.
தொழிலில் முன்னேற்றம் அமையும். வேலை தேடுபவருக்கு நல்ல வேலை அமையும். கடன் சுமைகள் குறைந்து வளர்ச்சி அடைவீர்கள். முக்கிய செய்திகளால் உங்களின் வாழ்க்கையில் நல்ல திருப்பம் அமையும். அரசியலில் புதிய பதவி கிடைக்கப் பெறுவீர்கள். பொருளாதார நிலை சீராகும்.
சந்திராஷ்டம நாட்கள் : 04.11.2023 சனி அதிகாலை 04.30 முதல் 06.11.2023 திங்கள் மாலை 03.38 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், பச்சை, சிவப்பு.
அதிர்ஷ்ட திசைகள் : கிழக்கு, வடகிழக்கு, மேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள் : செவ்வாய், புதன், வியாழன்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள் : செவ்வாய்க்கிழமைகளில் சுப்ரமணியரை வணங்கி நெய் தீபமும், சிவப்பு நிற பூவும் வைத்து வேண்டிக்கொள்ள சகல காரியங்களும் நன்மை தரும்.
மகரம்
கற்பனைத் திறனை வளர்த்து கவிபாடும் மகர ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு மறைவு ஸ்தானத்தை குரு பார்வையிடுவதும், சனி ராசிநாதன் வக்கிர கதியில் அமர்வதும் உங்களின் அன்றாட சில விடயங்களில் சற்று முன்னேற்றத்தை உண்டாக்கும்.
தொழிற்சங்கத்திலும், பொது வாழ்விலும் நீங்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறுவீர்கள். தனிப்பட்ட உங்களின் விருப்பங்களை விட மற்றவரின் வாழ்க்கையைப் பற்றிச் சிந்திப்பீர்கள். உறுதியுடன் செயற்பட்டு நன்மை அடைவீர்கள். உங்களின் கருத்துக்களுக்கு மக்களிடம் நல்ல மரியாதை இருக்கும்.
கலைத்துறையினருக்கு சிறிது தாமதமான பணி இருந்தாலும், குறித்த நேரத்தில் முடித்துவிடுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு திடீர் வாய்ப்புகளும் மதிப்பும் மரியாதையும் உண்டாகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள்.
சந்திராஷ்டம நாட்கள் : 06.11.2023 திங்கள் மாலை 03.27 முதல் 09.11.2023 வியாழன் அதிகாலை 03.18 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள் : நீலம், வெண்மை, சிவப்பு.
அதிர்ஷ்ட திசைகள் : தெற்கு, தென்மேற்கு, கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள் : சனி, ஞாயிறு, திங்கள்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள் : சனிக்கிழமை ஆஞ்சநேயர் வழிபாடும் ஞாயிறு மாலை நவக்கிரக வழிபாடும் உங்களின் சுபிட்சமான வாழ்வுக்கு வழிவகுக்கும்.
கும்பம்
அமைதியையும் தைரியத்தையும் கொண்டு விளங்கும் கும்ப ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வை பெறும் இடங்கள் சிறப்பான நற்பலன்களைப் பெற்றுத் தரும். பாதுகாப்புப் பணியில் உங்களின் பங்கு சிறப்பாக அமையும். சிறு தொழில் செய்யும் வியாபாரிகளுக்கு பொருளாதாரத்திலும், வியாபாரத்திலும் மேன்மை உண்டாகும். உங்களின் யோகாதிபதி சுக்கிரன் ராசியைப் பார்ப்பது நல்ல பதவி உயர்வு, அரசியலில் முக்கியத்துவம் பெறுவது போன்ற வாய்ப்புகளை பெற்றுத் தரும்.
ஒரு சில கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் மூலம் வெளிநாடு செல்வது, நிகழ்ச்சிகளில் வளர்ச்சி பெறுவது போன்ற நிகழ்வுகள் அமையும். தனிப்பட்ட விடயங்களில் சில காரியங்கள் தாமதமாகும். விரய செலவுகள் தவிர்க்க முடியாமல் போகும். பெண்களுக்கு உடல்நலக் குறைவு உண்டாகும்.
சந்திராஷ்டம நாட்கள்: 09.11.2023 வியாழன் அதிகாலை 02.19 முதல் 11.11.2023 சனி பகல் 01.56 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, வெண்மை, ஒரெஞ்சு.
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடமேற்கு, வடக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வெள்ளி.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: ஞாயிறு மாலை 04.30 /- 06.00 மணிக்கு வைரவர் வழிபாடு செய்து மூன்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்கி வர நினைத்த காரியம் கைகூடும்.
மீனம்
நிதானமாக எதையும் செய்து வழிநடத்தும் மீன ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு தன ஸ்தானத்தில் குரு அமர்ந்து மறைவு ஸ்தானங்களையும், தொழில் ஸ்தானத்தையும் பார்வையிடுவது உங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
ஏழரை சனியில் வக்கிர சனியால் பாதிப்பு இல்லை. என்றாலும் திடீர் செலவுகள் வந்து உங்களுக்கு பொருளாதார பலவீனம் உண்டாகும். வெளிநாடு செல்லத் தடை நீங்கும். கவனக் குறைவால் ஏற்பட்ட தவறுகளைச் சரி செய்து விடுவீர்கள்.
அரசியலிலும் பொது வாழ்விலும் உங்களின் ஈடுபாடுகள் குறைவாக இருந்தாலும் உதவிகளை செய்வீர்கள். உங்களின் எதிர்பார்ப்புகள் விரைவில் நிறைவேறும். புதிய திட்டங்களைச் செயற்படுத்த தயக்கம் காட்டுவீர்கள். கலைத்துறையினர் முன்னேற்றம் பெறுவீர்கள்.
சந்திராஷ்டம நாட்கள்: 11.11.2023 சனி பகல் 01.57 முதல் 13.11.2023 திங்கள் இரவு 10.25 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், நீலம், ஒரெஞ்சு.
அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, வடகிழக்கு, தெற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், சனி, திங்கள்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: ஞாயிறு மாலை 04.30 - 06.00 மணிக்கு வைரவர் வழிபாடும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றியும் வேண்டிக்கொள்ள, தடைகள் நீங்கும். பொருளாதார பிரச்சினை தீரும்.
(கணித்தவர்: ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM