தமிழக முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் டுவிட்டர் பக்கத்தில் chief Minister of Tamilnadu என்பதற்கு பதிலாக Cheif Minister of Tamilnadu என்று குறிப்பிட்டுள்ளது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அதிமுக-கட்சியைச் சேர்ந்தவரான எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பதவி ஏற்றார். இவர் தலைமையில் அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் முதல்வரான எடப்பாடி பழனிச்சாமியின் டுவிட்டர் பக்கத்தில் தவறு இருப்பதாக கூறி சமூகவலைத்தளங்களில் அது தொடர்பான புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. அதாவது அதில் chief Minister of Tamilnadu என்பதற்கு பதிலாக Cheif Minister of Tamilnadu என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆங்கிலம் தெரியாத நபர் தமிழ் நாட்டின் முதல்வரா என்று பலரும் தங்கள் கருத்துகளை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.