புதுக்குடியிருப்பு கைவேலிப்பகுதியில் நேற்று 15 இலட்சம் ரூபா பெறுமதியான 14 கிலோ 100 கிராம் கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த கேரள கஞ்சாவினை விற்பனைக்காக களஞ்சியப்படுத்தியவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வடபிராந்திய உயர் பொலிஸ் அதிகாரியின் பணிப்பிற்கு அமைய புதுக்குடியிருப்பிற்கு விரைந்த பொலிஸ் சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் குறித்த கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.  

மீட்கப்பட்ட கேரள கஞ்சா 7 பொதிகளில் பொதி செய்யப்பட்ட நிலையில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  கைது செய்யப்பட்டவரையும் மீட்கப்பட்ட கேரளா கஞ்சாவினையும் மேலதிக நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.