ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் : தகுதிபெற்ற நாடுகளும் தகுதிபெறுவதற்கான வாய்ப்புகளும்

31 Oct, 2023 | 10:05 AM
image

(இந்தியாவின் பூனேயிலிருந்து நெவில் அன்தனி)

ஐசிசியினால் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறையும் பின்னர் நான்கு வருடங்களுக்கு ஒருமுறையும் நடத்தப்பட்டுவந்த ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி 8 வருட இடைவெளிக்குப் பின்னர் பாகிஸ்தானில் 2025இல் அரங்கேற்றப்படவுள்ளது.

இந்தியாவில் தற்போது நடைபெற்றுவரும் 13ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயம் 2025 சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்டுக்கான தகுதிகாண் சுற்றாக அமைகிறது.

இதற்கு அமைய உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி முடிவில் முதல் ஏழு இடங்களைப் பெறும் அணிகள் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாட தகுதிபெறும்.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இப்போதைக்கு 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் இந்தியாவும் 10 புள்ளிகளுடன் 2ஆம் இடத்தில் இருக்கும் தென் ஆபிரிக்காவும்   வரவேற்பு நாடு என்ற வகையில் பாகிஸ்தானும்   2025 சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்றுவிட்டன.

இந்தியாவும் தென் ஆபிரிக்காவும் 7ஆம் இடத்திற்கு அப்பால் செல்வதற்கான வாய்ப்பு இல்லை.

ஒருவேளை உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் 9ஆம் இடத்தை அல்லது அதற்கு அப்பால் பெற்றால் அணிகள் நிலையில் முதல் 7 இடங்களைப் பெறும் அணிகளும் பாகிஸ்தானும் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாட தகுதிபெறும்.

இதேவேளை, உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டிகளில் விளையாட தகுதிபெற முடியாமல் போனால், சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதை உறுதி செய்ய இலங்கை முதல் 7 இடங்களுக்குள் வர கடுமையாக முயற்சிக்க வேண்டிவரும்.

நியூஸிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளும் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாட தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

எஞ்சிய 3 இடங்களுக்கு இலங்கை, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, பங்களாதேஷ், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு இடையில் போட்டி நிலவவுள்ளது.

அங்குரார்ப்பண சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்  

அங்குரார்ப்பண சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் அத்தியாயம் தென் ஆபிரிக்காவில் 1998இல் நடத்தப்பட்டது.

அதன் பின்னர் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நியூஸிலாந்து (2000), இந்தியா மற்றும் இலங்கை (2002), மேற்கிந்தியத் தீவுகள் (2004), அவுஸ்திரேலியா (2006) ஆகிய நாடுகளில் நடத்தப்பட்டது.

மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் அவுஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் அதன் பின்னர் 4 வருடங்களுக்கு ஒரு முறை இந்தியாவிலும் (2013), கடைசியாக பாகிஸ்தானிலும் (2017) நடத்தப்பட்டது.

இந் நிலையில் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 10 நாடுகளுக்கு இடையிலான போட்டியாக உருபெற்றதால் 8 நாடுகளுக்கு இடையிலான சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் கைவிடப்பட்டது.

எனினும் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி பொதுச் சபைக் கூட்டத்தில் 2027 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 14 நாடுகளை இணைப்பது என்றும் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியை மீண்டும் நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி வழமைபோல் 8 நாடுகளுக்கு இடையிலான போட்டியாக தலா 4 அணிகளைக் கொண்ட இரண்டு குழுக்களில் நடத்தப்படும்.

அதன் பின்னர் அரை இறுதிகளும் இறுதிப் போட்டியும் இடம்பெறும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில்...

2025-04-17 03:42:47
news-image

இலங்கைக்கு இரண்டாவது வெள்ளிப் பதக்கம்: பெண்களுக்கான...

2025-04-17 03:40:20
news-image

சுப்பர் ஓவரில் ராஜஸ்தான் றோயல்ஸை டெல்ஹி...

2025-04-17 03:38:02
news-image

பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டத்தில் சர்ச்சை;...

2025-04-16 23:21:01
news-image

லொஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக் விளையாட்டு...

2025-04-16 17:15:53
news-image

ஆசிய ஹொக்கி சம்மேளனக் கிண்ணம் 2025;...

2025-04-16 16:06:32
news-image

 யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அமைக்க ...

2025-04-16 02:15:30
news-image

18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தில் குறைந்த எண்ணிக்கைகள்...

2025-04-16 01:47:52
news-image

18இன் கீழ் ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்:...

2025-04-16 01:45:17
news-image

18 வயதுக்குட்பட்ட ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்:...

2025-04-16 01:42:08
news-image

ஆப்கன் ஏ அணிக்கு எதிராக சதீர...

2025-04-15 19:55:17
news-image

18இன் கீழ் ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்...

2025-04-15 16:34:11