(எம்.ஆர்.எம்.வசீம்)
சீன அரசாங்கத்தின் உதவித் திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் உடையவர்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ள கொழும்பு பேஸ்லைன் வீதியில் உள்ள ஆடு மற்றும் இறைச்சி மடுவ காணிகளின் உரிமை தொடர்பில் கொழும்பு மாநகர சபைக்கும் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கும் இடையிலான இழுபறியை உடனடியாக நிறுத்துமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இரு தரப்பு அதிகாரிகளிடமும் ஆலாேசனை வழங்கியுள்ளார்.
குறித் காணியின் உரிமை தொடர்பாக கொழும்பு மாநகர சபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுக்கிடையில் ஏற்பட்டுவந்த இழுபறி தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் ஒன்றுக்குவர நேற்று முன்தினம் நகர அபிவிருத்தி அதிகாரசபையில் கலந்துரையாடல் ஒன்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் இடம்பெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஆடு மற்றும் இறைச்சி மடுவம் ஆகிய இரண்டும் அரசாங்கத்தின் காணிகளாகும். அதேபோன்று கொழும்பு மாநகர சபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஆகிய இரண்டும் அரச நிறுவனங்காகும். அரச நிறுவனங்களுக்கிடையே இடம்பெறும் இந்த முரண்பாடு காரணமாக அபிவிருத்தி நடவடிக்கைகள் தாமதமாகலாம். இந்த கருத்து வேற்றுமை காரணமாக சில சந்தர்ப்பங்களில் அபிவிருத்தி திட்டங்கள் நாட்டுக்கு இல்லாமல் போவதற்கும் இடமிருக்கிறது. அவ்வாறான நிலை ஏற்பட்டால் அரசில் வாதிகளுக்கே குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது.
அதனால் குறித்த விடயம் தொடர்பாக இரண்டு தரப்பினரும் கலந்துரையாடி புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு வரவேண்டும் இதன் மூலம் இரண்டு நிறுவனங்களுக்கும் நம்பிக்கை ஏற்படும். அரச நிறுவனங்கள் பொது மக்களுக்காகவே செயற்படுகின்றன அதனால் சட்ட திட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளில் சிக்கிக்கொண்டிருக்காமல் பொது மக்களுக்கு நன்மை ஏற்படும் வகையில் அரச நிறுவனங்கள் செயற்பட வேண்டும் என்றார்.
சீன அரசாங்கத்தின் உதவித் திட்டத்தின் கீழ் 1996 வீடுகள் கட்டப்படும். அதற்காக சீன மக்கள் குடியரசு 552 மில்லியன் யுவான் நிதி உதவி வழங்க உள்ளது. கொழும்பு பேஸ்லைன் வீதியில் உள்ள ஆடு மற்றும் இரைச்சி மடுவ காணிகளில் சுமார் 500 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
அத்துடன் சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெறவிருக்கும் "ஒத்துழைப்புக்கான சாலைகள்" (BRI) மாநாட்டின் போது வீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM