டுபாயில் இடம்பெற்றுவரும் பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் இன்றைய முதல் போட்டியில்  லாஹுர் கெலண்டர்ஸ் அணியை எதிர்கொண்ட கட்டார் கிலாடியேட்டர்ஸ் அணி அபார வெற்றிபெற்றது.

201 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய கிலாடியேட்டர்ஸ் அணி 7 பந்துகள் மீதமிருக்க வெற்றியிலக்கை அடைந்தது.

முதலில் போட்டியில்  லாஹுர் கெலண்டர்ஸ் அணி 3 விக்கட்டுளை இழந்து 200 ஓட்டங்களை பெற்றது.

இதில் ஜேசன் ரோய் 51 ஓட்டங்களையும, பஹ்க்கர் ஷமான் 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பாரிய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கிலாடியேட்டர்ஸ் அணி கெவின் பீட்டர்சனின் அதிரடியின் உதவியுடன் 19.5 ஓவர்களில் 202 ஓட்டங்களை பெற்று அபார வெற்றிபெற்றது.

கிலாடியேட்டர்ஸ் அணி சார்பில் பீட்டர்சன் ஆட்டமிழக்காமல் 88 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் தெரிவுசெய்யப்பட்டார்