ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 3 இராணுவத்தினரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி குறித்த மூவரையும் எதிர்வரும் 23 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கீத் நொயார் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்று ஒரு இராணுவ மேஜர் உட்பட 3 இராணுவத்தினர் கைதுசெய்யப்பட்டனர்.

ஊடகவியலாளர் கீத் நொயார்  கடந்த 2008 ஆம் ஆண்டு கொழும்பில் வைத்து தாக்குதலுக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.