மத்திய வங்கி பிணைமுறி மோசடியை தடுக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவில்லை - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

Published By: Vishnu

30 Oct, 2023 | 04:50 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மத்திய வங்கி பிணைமுறி கொடுக்கல் வாங்கல் மோசடியை தடுக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தவறை சுட்டிக்காட்டும் தற்துணிவு எமக்கு உள்ளது.

இடைக்கால ஜனாதிபதியாகவே அவரை தெரிவு செய்தோம். 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் எமது உறுப்பினரையே வேட்பாளராக களமிறக்குவோம் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் உள்ள பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் திங்கட்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

சுதந்திரத்துக்கு பின்னரான காலப்பகுதியில் நாட்டுக்காக எமது கட்சியே அர்ப்பணிப்புடன் செயற்பட்டது.2019 ஆம் ஆண்டு பாரிய எதிர்பார்ப்புடன் மக்கள் கோட்டபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தெரிவு செய்து,2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் ஊடாக ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.

2019 ஆம் ஆண்டு இறுதி பகுதியில் பூகோள மட்டத்தில் தாக்கம் செலுத்திய கொவிட் பெருந்தொற்று தாக்கத்தில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அவதானம் செலுத்தினார்.பொருளாதாரத்தை காட்டிலும் மக்களின் சுகாதாரம் குறித்து அவர் கவனம் செலுத்தி அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.

நாட்டில் கொவிட் பெருந்தொற்று தாக்கம் செலுத்தியதை ஒரு தரப்பினர் தற்போது மறந்து விட்டார்கள்.பொருளாதார நெருக்கடியை எமது அமைச்சரவையில் அங்கம் வகித்தவர்கள் அரசியல் நெருக்கடியாக மாற்றியமைத்தார்கள்.அப்போதைய சூழலில் ஜனநாயகம் மற்றும் சட்டம் ஒழுங்கு என்பவற்றை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு இருந்தது.

அரசாங்கத்தை பொறுப்பேற்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டது.அவர்கள் ஏற்கவில்லை. அதனை தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்துள்ளதால் அவரது கொள்கைகளை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.பிற்பட்ட காலத்தில் அரசாங்கம் எடுத்த தீர்மானங்களுக்கும் அவர் ஒத்துழைப்பு வழங்கவில்லை.

மத்திய வங்கி பிணைமுறி மோசடியை தடுப்பதற்கு அவர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.ஆகவே தவறை சுட்டிக்காட்டும் தற்துணிவு எமக்குண்டு.

பாராளுமன்றத்தின் ஊடாக இடைக்கால ஜனாதிபதியாகவே ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்துள்ளோம்.கூட்டணி அரசாங்கத்தில் ஜனாதிபதி எவ்வாறு செயற்பட வேண்டும் என்று ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் குறிப்பிடுவது நியாயமானதே.2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே களமிறக்குவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டுக்காகவேனும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மீண்டும்...

2024-07-15 17:55:06
news-image

முச்சக்கர வண்டி கட்டணம் குறைப்பு -...

2024-07-15 21:05:05
news-image

நிறைவிற்குக் கொண்டுவரப்பட்ட கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி...

2024-07-15 20:59:03
news-image

2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு...

2024-07-15 20:40:53
news-image

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியாத அரசாங்கத்தினால்...

2024-07-15 17:54:13
news-image

இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட தாராதேவி சிலை...

2024-07-15 17:46:09
news-image

சட்டவிரோதமாக புதையல் தோண்டிய நால்வர் கைது

2024-07-15 20:45:10
news-image

சட்டவிரோதமாக மாணிக்கக் கல் அகழ்வு பணியில்...

2024-07-15 20:47:44
news-image

இங்கிரியவில் கெப் வாகனம் மோதி பாதசாரி...

2024-07-15 18:23:15
news-image

மின்கட்டண குறைப்பு - முழுமையான விபரங்கள்...

2024-07-15 20:32:40
news-image

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த இருவர்...

2024-07-15 18:22:04
news-image

கொள்ளுப்பிட்டியில் விபத்து ; புதுமண தம்பதிகள்...

2024-07-15 18:15:13