கேகாலை, நாபே ஸ்ரீ போதிருக்காராம விகாரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புத்த பிரானின் 36 உருவச்சிலைகளை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று (17) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துக்கொண்டிருந்தார்.

குறித்த நிகழ்வின் போது நெகிழ்ச்சியான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது விசேட தேவையுடை பெண்ணொருவர் ஜனாதிபதியின் கையை விடாமல் பிடித்துக்கொண்டு, “வாங்களே...! வாங்களே...! என தனது பாசத்தை வெளிப்படுத்தியமை அனைவரது மனதையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஜனாதிபதி கையை விடுத்து நகர முயன்ற போதும் குறித்த பெண் ஜனாதிபதியின் கையை விடவில்லை. இந்நிலையில் ஜனாதிபதி குறித்த பெண்ணுக்கு ஆறுதல் கூறியதுடன், குறித்த பெண்ணின் பிரச்சினைகளையும் கேட்டறிந்தார்.

இதன்போது குறித்த பகுதியில் இருந்த மக்கள் கருத்து தெரிவிக்கையில், குறித்த விசேட தேவையுடைய பெண் ஜனாதிபதி மீது மிகவும் அன்பு கொண்டவர் எனவும், குறித்த பெண்ணுக்கு நிரந்தர இருப்பிடமொன்று இல்லையெனவும் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் குறித்த விடயங்களை கேட்டறிந்த ஜனாதிபதி, சரியான தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.