நடிகர் கார்த்தி தனது 25வது படமான 'ஜப்பான்' படத்தை வெளியிட தயாராகி வரும் நிலையில் மக்களுக்கு உதவும் திட்டங்களுக்காக ஒரு கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ஜப்பான். இந்த படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நேற்று முன்தினம் 28 ம் திகதி நடைபெற்றது. இதன்போது பேசிய நடிகர் கார்த்தி தனது 25வது படத்தை முன்னிட்டு மக்கள் நலன் திட்டங்களுக்கு உதவுவதாக தெரிவித்துள்ளார்.
அதில் தலா ரூ.25 லட்சம் சமூக செயற்பாட்டாளர்கள், அரச பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் ஏழைகளுக்கு என வழங்கப்படTள்ளது. மேலும் இது உதவி அல்ல என்றும் மக்கள் தனக்கு அளிந்த அங்கீகாரத்திற்கான நன்றி கடன் என்றும் கூறியுள்ளார்.
கார்த்தியின் இந்த செயல் சமூக ஊடகங்களில் நெட்டிசன்களிடமிருந்து கைதட்டலைப் பெறுகிறது. மேலும் இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
கார்த்தி தனது 25வது படத்தில் இதுவரை இல்லாத ஒரு பாத்திரத்தை வழங்க உள்ளார். குறித்த படம் தீபாவளிக்கு நவம்பர் 10 ஆம் திகதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் நடிகர் கார்த்தியுடன் இணைந்து அனு இமானுவேல், சுனில், கே.எஸ்.ரவிக்குமார், விஜய் மில்டன் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
இப்படத்தை குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி ஆகியப் படங்களை இயக்கிய ராஜூமுருகன் இயக்க, கதையினை ஜெயப்பிரகாஷ் திருமலைசாமி எழுதியுள்ளார். வசனத்தை ராஜூமுருகனும் முருகேசன் பாபுவும் எழுதியுள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM