இந்திய வெளியுறவு செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் இன்று 5.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இவர் இலங்கை வந்துள்ளார்.

இலங்கையுடன் இந்தியா மேற்கொள்ளப்பட உள்ள புதிய இருதரப்பு ஒப்பந்தங்கள் குறித்து கவனம் செலுத்துதல் மற்றும் திருகோணமலை மற்றும் வடக்கில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து இந்த விஜயத்தின் போது கூடிய கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.