தட்டுப்பாடற்ற மணல் விநியோகத்தினை உறுதிப்படுத்த வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல்

Published By: Vishnu

31 Oct, 2023 | 12:45 PM
image

வடக்கு மாகாணத்தின் மணல் அகழ்வு மற்றும் மணல் விநியோகம் தொடர்பான விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ்.கிளி.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் திங்கட்கிழமை (30.10.2023) இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.

குறிப்பாக, வடக்கு மாகாணத்தின் கட்டுமாணப் பணிகளுக்கு  தேவையான மணல் நியாயமான விலையிலும்  தட்டுப்பாடின்றியும்  கிடைப்பதை உறுதிப்படுத்துவது தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அதனடிப்படையில், வடமாராட்சி கிழக்கு பகுதியில் அடையாளம் காணப்பட்ட மணல் திட்டுக்களில் மணல் அகழ்வினை மேற்கொள்வதில் காணப்படும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

குறிப்பாக பெரும்பாலான மணல் திட்டுக்கள் வனவளப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் ஆகிய திணைக்களங்களினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளமையினால் சம்மந்தப்பட்ட திணைக்களங்களின் பிராந்திய அதிகாரிகள் இன்றைய கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டிருந்ததுடன், நிறைவேற்று நிலை அதிகாரிகளும் சூம் காணொலி ஊடாக கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில், சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவதற்கும், மணல் அகழ்வு அனுமதிகள் வழங்கப்பட்டு தட்டுப்பாடின்றி மணல் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அடையாளப்படுத்தப்பட்ட மணல் திட்டுக்களில் மணல் அகழ்வை மேற்கொள்வதற்கான ஒத்துழைப்புக்களை அனைத்து திணைக்களங்களும் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

மேலும்,  சட்டவிரோத மணல் அகழ்வினை கட்டுபடுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கையின்  முன்னேற்றங்கள்  தொடர்பாகவும் பொலிஸார் மற்றும் அதிகாரிகரகளிடம் கேட்டறிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆலோசனைகளையும் வழங்கினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வலியுறுத்திய விடயங்கள் வரவு - செலவுத்...

2025-02-08 16:55:07
news-image

சட்டமா அதிபருக்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிப்பது...

2025-02-08 16:54:04
news-image

மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசியல்...

2025-02-08 17:10:39
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை செயற்படுத்த...

2025-02-08 16:53:41
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக் கொள்ள...

2025-02-08 15:46:50
news-image

பாடசாலை அதிபரை கடத்திச் சென்று தாக்கி...

2025-02-08 17:33:13
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக்கொள்ள முடியாது...

2025-02-08 23:30:32
news-image

நுவரெலியா - தலவாக்கலை மார்க்கத்தில் ஈடுபடும்...

2025-02-08 17:12:01
news-image

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் பிரதமர் ஹரிணியை சந்தித்து...

2025-02-08 14:53:14
news-image

பொலன்னறுவையில் விபத்து ; ஒருவர் பலி...

2025-02-08 16:36:31
news-image

மாத்தறையில் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

2025-02-08 16:17:24
news-image

வட்டுக்கோட்டை துணைவி பிரகேதீஸ்வரர் ஆலயத்தினை மீள்...

2025-02-08 15:46:12