இலங்கை மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான நேற்றைய போட்டியில், லசித் மலிங்கவின் காற்ச்சட்டை பையில் வைத்திருந்த மர்மப்பொருள் தொடர்பில் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மலிங்க பந்து வீசிக்கொண்டிருக்கும் போது அடிக்கடி கையை தனது காற்ச்சட்டை பையில்  வைத்துக்கொண்டிருந்தார்.

அதனை ஒளிப்பதிவு கெமராக்கள் மூலம் பார்வையிட்ட மூன்றாவது நடுவர், கள நடுவருக்கு அறிவித்து மலிங்கவின் காற்ச்சட்டை பையில்  என்ன இருக்கின்றது என்பது தொடர்பில் ஆராயுமாரு கூறினார்.

இதனையடுத்து கள நடுவர் ஆராய மலிங்கவின் காற்ச்சட்டை பையில்  இருந்த “கை சூடாக்கியை” மலிங்க எடுத்துக்காட்டினார்.

எம்.சி.ஜி. மைதானத்தில் குளிராக இருந்ததால் குறித்த கை சூடாக்கியை மலிங்க வைத்திருந்தார். இதேவேளை குளிராக இருந்தால் கை சூடாக்கியை வீரர்கள் பயன்படுத்த முடியும் என போட்டி வர்ணனையாளர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.