வவுனியா மன்னார் வீதி பிரதேச செயலகத்திற்கு முற்பகுதியில் உள்ள பாதசாரி கடவையில் ஏற்பட்ட விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொதுவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்
இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
ஞாயிற்றுக்கிழமை (29) இரவு 10.15 மணியளவில் வவுனியா மன்னார் வீதி வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பாதைசாரி கடவை பகுதியிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது .
முல்லைத்தீவு மின்சார சபையில் பணி புரியும் ஊழியர் ஒருவர் குருமன்காடு கலைமகள் மைதானத்திற்கு அருகில் உள்ள வீட்டிலிருந்து தனது பணி நிமித்தம் முல்லைத்தீவு செல்வதற்காக பேருந்து நிலையம் நோக்கி நடந்து செல்கையில் அதே திசையில் பயணித்த வேன் ஒன்று வேகக்கட்டுப்பட்டை இழந்து நடந்து சென்றவருடன் மோதியதில் குறித்த நபர் படுகாயமடைந்து வவுனியா பொதுவைத்தியசலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் .
குறித்த வேனின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரனைகளை வவுனியா பொலிஸ்நிலைய போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா மன்னார் வீதி கலைமகள் மைதானத்திற்கருகில் தற்காலிகமாக வசித்து வந்த மூன்று பிள்ளைகளின் தந்தையாரான 48 வயதுடைய குடும்பஸ்தரே விபத்தில் படுகாயமடைந்த நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM