கனடா - இந்தியா உறவு சீர் பெறுகிறதா?

Published By: Vishnu

29 Oct, 2023 | 03:56 PM
image

ஐங்கரன் விக்கினேஸ்வரா

கனடா – இந்­தியாவுக்கிடையிலான  உறவில் உச்சக் கட்ட முறு­கலை சீக்­கிய காலிஸ்­தா­னிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படு­கொ­லை  தோற்­று­வித்­தது. அதன்பின் இரு நாட்­டிலும் இருந்து இராஜ தந்­தி­ரிகள் வெளி­யேற்­றப்­பட்­டனர்.

தற்­போது நடைபெறும் இஸ்ரேல்– பலஸ்தீனப்  போரில் இந்­தியா இஸ்­ரே­லுக்கு உறு­தி­யான ஆத­ரவு என்­பது, இந்­தியா மேற்­கு­லகை நோக்கி திசை திரும்­பு­கி­றதா என்று எண்ணத்தோன்றுகிறது. இப்­போது இஸ்­ரே­லுக்கு ஆத­ர­வாக மாறிய இந்­தி­யாவின் நிலைப்­பாட்டையடுத்து, கனடாவுடனான  உறவை சீர்­செய்ய சாத்­தி­யங்கள் உரு­வாகி உள்­ளன.

இஸ்­ரே­லுக்கு ஆத­ர­வாக இந்­தியா ?

இந்­தியப் பிர­தமர் மோடி, ‘இந்தக் கடி­ன­மான நேரத்தில் இஸ்­ரேலின் பக்கம் நாங்கள் ஒற்­று­மை­யாக நிற்­கிறோம்’ என்று இஸ்­ரே­லுக்கு தனது வெளிப்­படை ஆத­ரவை தெரி­வித்­தி­ருந்தார்.

இத்­த­கைய மாற்றம் உள்­நாட்டில் சர்ச்­சையை கிளப்பி இருந்­தாலும், பாரத நாடு மேற்­கு­லகை  ஆத­ரிக்கும் தனது செயற்­பாட்டால், முஸ்லிம் நாடு­களின் எதிர்ப்பை நேர்­கொண்­டது. ஆயினும்,   இந்­தி­யாவின் மேற்­கு­லகை நோக்கிய இந்த  திசை திரும்­பு­தலையடுத்து கனடாவுடனான உறவை மீண்டும் புதுப்­பிக்க அமெ­ரிக்கா முயலும்.

இந்­தியா இஸ்­ரே­லுக்கு உறு­தி­யான ஆத­ர­வாக இப்­போது மாறியதையடுத்து இந்­தியப் பிர­தமர் மோடி, இஸ்ரேல் பிர­தமர் பெஞ்­சமின் நெதன்­யா­கு­விடம் தொலை­பேசி வாயி­லாக தற்­போ­தைய கடி­ன­மான இந்தத் தரு­ணத்தில் இஸ்­ரே­லுக்கு இந்­திய மக்கள் தங்கள் உறு­தி­யான ஆத­ரவை அளித்­து­வ­ரு­கி­றார்கள் என தெரி­வித்தார். பயங்­க­ர­வா­தத்தின் அனைத்து வடி­வங்­க­ளையும் இந்­தியா உறு­தி­யாகக் கண்­டிக்­கி­றது எனவும் மோடி தெரி­வித்தார்.

உச்­சக்­கட்ட முறுகல் ஏன் ?

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்­டுக்­கொல்­லப்­பட்ட சம்­ப­வத்தின் பின்­ன­ணியில் இந்­திய அர­சாங்கம் இருக்­கலாம் என பிர­தமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரி­வித்­தி­ருந்தார். இதன்பின் இந்­திய ராஜ­தந்­திரி ஒரு­வரை கனே­டிய அர­சாங்கம் நாட்டில் இருந்து வெளி­யே­று­மாறு அறி­வித்­தது.

ஹர்தீப் சிங்கின் மர­ணத்­திற்கும் இந்­திய அர­சுக்கும் இடையேயான தொடர்பை கனே­டிய  உள­வுத்­துறை கண்­ட­றிந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டது.  இந்­திய அரசின் முக­வர்­க­ளுக்கும், கனடா பிரஜையின் படு­கொ­லைக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றி கனே­டிய புல­னாய்வு துறைகள் தொடர்ந்து விசா­ரித்து வரு­கின்­றன என­வும்­ கனே­டிய பிர­தமர் கூ­றினார்.

கனடா நாட்டு குடி­மகன் ஒருவரின் படு­கொ­லையில் அந்­நிய நாட்டு அரசின் தொடர்பு இருப்­பது என்­பது ஏற்று கொள்ள முடி­யா­தது என்று அவர் அழுத்திக் கூறி­யுள்ளார். இதனைத் தொடர்ந்து இந்­தி­யா­வுக்­கான கனேடிய தூதுவர் கேமரூன் மெக்­கே 19.09.2023 அன்று இந்­திய வெளி­யு­றவு அமைச்­சுக்கு அழைக்­கப்­பட்டு,  அடுத்த ஐந்து நாட்­க­ளுக்குள் இந்­தி­யாவை விட்டு வெளி­யே­று­மாறு கேட்கப்­பட்­டமை அறிந்­ததே.

இந்­தி­யாவின் உள் விவ­கா­ரங்­களில் கனே­டிய ராஜ­தந்­தி­ரியின் தலை­யீடு மற்றும் இந்­தி­யா­வுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களில் அவர் ஈடு­பட்­டதை அடுத்தே இந்த முடிவு எடுக்­கப்­பட்­டதாக தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­தியாவின் உறவு கன­டா­வுக்கு முக்­கி­யமா ?

இந்­தியாவுட­னான உறவு கன­டா­வுக்கு மிகவும் முக்­கியம் என்று கனடா பாது­காப்பு அமைச்சர் பில் பிளேர் தெரி­வித்­துள்ளார். ஹர்தீப் சிங் நிஜ்ஜார்(45) கன­டாவின் பிரிட்டிஷ் கொலம்­பியா மாகா­ணத்தில் கடந்த ஜூன் 18 ஆம் திகதி கொல்­லப்­பட்டார். ஹர்தீப் சிங் நிஜ்­ஜாரை தீவி­ர­வாதி என கடந்த 2020 இல் இந்­தியா அறி­வித்­தி­ருந்­தது.

இரு நாட்டு அர­சு­க­ளுக்கு இடை­யே­யான இந்த இரா­ஜ­தந்­திர மோதல் கார­ண­மாக முன் எப்­போதும் இல்­லாத அளவு இரு­த­ரப்பு உறவும் பாதிக்­கப்­பட்­டது. இதை­ய­டுத்து,   விசா வழங்­கப்­ப­டு­வது தற்­கா­லி­க­மாக நிறுத்­தப்பட்டது. ஆயினும் இந்­தி­யாவின் உறவு கன­டா­வுக்கு முக்­கியம் என்று கனடா பாது­காப்புத் துறை அமைச்சர் பில் பிளேர் தெரி­வித்­துள்­ளமை தற்­போது முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாகும்.

இந்­தியாவுட­னான உறவு கன­டா­வுக்கு மிகவும் முக்­கியம். தற்­போ­துள்ள சூழலை நாங்கள் புரிந்து கொள்­கிறோம். இந்­தியாவுட­னான உறவை கனடா மிகவும் மதிக்­கி­றது. இது ஒரு சவா­லான விஷயம். எங்கள் சட்­டத்தை, எங்கள் குடி­மக்­களை பாது­காக்கும் பொறுப்பு எங்­க­ளுக்கு இருக்­கி­றது.

அதே நேரத்தில் ஒரு முழு­மை­யான விசா­ர­ணையை நடத்தி உண்­மையைக் கண்­ட­றி­வ­தற்கும் எங்­க­ளுக்கு பொறுப்பு உள்­ளது. கனேடிய மண்ணில் கன­டாவின் குடி­மகன் ஒரு­வரைக் கொல்­வது என்­பது கன­டாவின் இறை­யாண்­மையை மீறும் செயல் என்­பதால் அது கவலை தரக்­கூ­டி­ய­தா­கவே இருக்கும். ஆயினும் இந்­தோ-­–ப­சுபிக் வியூகம் கன­டா­வுக்கு மிக மிக முக்­கியம் என பாது­காப்புத் துறை அமைச்சர் தெரி­வித்­துள்ளார்.

இந்­தோ – ­பசுபிக் பிராந்­திய இரா­ணுவ இருப்பு

இந்­தோ-­ப­சுபிக் பிராந்­தி­யத்தில் மேற்­கு­லக ஆத­ரவு இரா­ணு­வத்தின் இருப்பை அதி­க­ரிக்­கவும், ரோந்துப் பணி­களை அதி­க­ரிக்­கவும் இந்­தோ-­ பசுபிக் ஒப்­பந்தம் வழி­வ­குத்­துள்­ளது. இதற்­காக 5 ஆண்­டு­க­ளுக்­கான நிதி­யாக 492.9 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் நிதி ஒதுக்­கப்­ப­டு­கி­றது. இதற்கு இந்­தி­யாவின் ஒத்­து­ழைப்பை அமெ­ரிக்கா வேண்­டி­யுள்­ளது.

மோடி அரசின் நிலைப்­பாட்டில் மாற்றம் :

2014 ஆம் ஆண்டு பா.ஜ.க வெற்­றி­பெற்று பிர­த­ம­ராக பிர­தமர் மோடி பொறுப்­பேற்ற பிறகு மேற்­கு­லக உறவு மட்­டு­மின்றி, இஸ்ரேல் –- பலஸ்­தீன நிலைப்­பாட்­டிலும் மாற்றம் ஏற்­பட்­டது. இது­வரை எந்த இந்­தியப் பிர­த­மரும் இஸ்­ரே­லுக்குச் சென்­றி­ருக்­காத நிலையில், 2017 ஆம் ஆண்டு இந்­திய பிர­தமர் மோடி முதன்­மு­றை­யாக இஸ்ரேல் நாட்­டுக்குச் சென்று பல ஒப்­பந்­தங்­களில் கையெ­ழுத்­திட்டார்.

இஸ்­ரே­லுக்குச் சென்ற முதல் இந்­திய பிர­தமர்   என்ற பெய­ரையும் பெற்றார். அதே­போல, தற்­போ­தைய போர்ச் சூழ­லிலும் இஸ்­ரே­லுக்கே தனது முழு ஆத­ர­வையும் அளித்­தி­ருக்­கிறார்.

முன்பு வல­து­சாரி, - இட­து­சாரி, அமெ­ரிக்கா ,- ரஷ்யா என உலக நாடுகள் இரண்டு தரப்­பாக அணி­வ­குத்­த­போதே இந்­தியா அணி சேராக் கொள்­கை­யுடன் இரண்டு தரப்­புக்கும் இல்­லாமல் நடு­நிலை வகித்­தது. இரண்டு தரப்பு நாடு­க­ளி­டமும் நட்­பு­றவைப் பேணி­வந்­தது.

அனைத்துச் சூழ­லிலும் மதச்­சார்­பற்ற ஜன­நா­யக நாடாகத் தன்னை இருத்திக் கொள்­வ­தி­லேயே குறி­யாக இந்­தியா இருந்து வந்­தது. இந்த நிலையில், 2014 ஆம் ஆண்டு  இந்­திய நாடா­ளு­மன்றத் தேர்­தலில் பா.ஜ.க வெற்­றி­பெற்று நரேந்­திர மோடி பிர­த­ம­ராகப் பொறுப்­பேற்ற பிறகு இந்­தி­யாவின் நிலைப்­பாட்டில் பாரிய மாற்­றங்கள் தென்­படத் தொடங்­கின.

அமெ­ரிக்க சார்பு நிலைப்­பாட்டில்  இந்­தியா ?

ஆசியப் பெருங்­கண்­டத்தில் ஓங்­கி­வரும் சீனாவின் அப­ரி­மித­மான அதி­கார மற்றும் பொரு­ளா­தார வளர்ச்சி இந்­தி­யா­வுக்கு மட்­டு­மன்றி அமெ­ரிக்க மேற்­கு­லக நாடு­க­ளுக்கும் சவா­லாக அமைந்­துள்­ளது. ஆசிய கண்­டத்­தையும் தாண்டி, ஆபி­ரிக்க ,- ஐரோப்­பிய நாடு­க­ளுக்கும் தனது பட்­டுப்­பாதைக் கனவை சீனா விரி­வு­ப­டுத்திச் செல்வதும் பெரும் தலைவலியாக இந்தியாவிற்கு அமைந்து வருகிறது.

சீனா தொடர்ச்­சி­யாக இந்­தி­யாவின் எல்­லைப்­ப­கு­தி­களில் அத்­து­மீறி நுழை­வது, ஆக்­கி­ர­மிப்பு - கட்­டு­மா­னங்­களை மேற்­கொள்­வது, இந்­திய இரா­ணு­வத்­தி­ன­ரோடு மோதலில் ஈடு­ப­டு­வது அதி­க­ரித்­த­படி சென்­ற­மையால் அமெ­ரிக்கா, பிரிட்டன் உள்­ளிட்ட மேற்­கு­லக நாடு­க­ளுடன் இந்­தியா நெருக்­கத்தை அதி­க­ரித்­துள்­ளது.

பலஸ்­தீன- –இஸ்ரேல் மோதல் நிகழும் இக்­கட்­டான கால­கட்­டத்தில் இந்­தியாவுட­னான உறவு கன­டா­வுக்கு மிகவும் முக்­கியம் என்று கனே­டிய பாது­காப்பு அமைச்சர் பில் பிளேர் தெரி­வித்­துள்­ளமை   முறிந்த உறவு சீர்பெற சாத்தியங்களை உருவாக்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலியல் தொழிலுக்காக வருகை தரும் ரஷ்ய...

2024-02-23 20:52:33
news-image

நீங்கள் என்ன செய்ய வேண்டும்.. என்ன...

2024-02-23 11:46:06
news-image

ஆயுளை முடித்துக்கொண்ட கிராண்பாதர்

2024-02-22 18:41:32
news-image

தொழிலாளர்களை தேடிச் செல்லும் பிரதிநிதிகள்!

2024-02-22 17:37:26
news-image

சவாலாக மாறுகிறதா சர்வதேச கடன் மறுசீரமைப்பு? 

2024-02-21 19:01:04
news-image

உட்கட்சி பூசல்கள் தமிழ் மக்களின் அரசியல் ...

2024-02-21 13:51:47
news-image

தனக்கென்று ஒரு மரபை விட்டுச்செல்வதில் ஜனாதிபதி...

2024-02-21 13:12:29
news-image

நவால்னி சிறையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டாரா ?...

2024-02-21 12:52:32
news-image

மலையக மக்களும் அஸ்வெசும திட்டமும்

2024-02-20 11:42:52
news-image

இலங்கை கடன்களில் மாத்திரம் தங்கியிருக்கும் நிலை...

2024-02-20 11:36:03
news-image

சித்திரை புத்தாண்டுக்குப்பிறகு பாராளுமன்றை கலைக்க ஜனாதிபதி...

2024-02-20 02:41:33
news-image

அரசியலும் ஆன்மிகமும் ஒருமித்து பயணிக்கும் முயற்சி...

2024-02-19 17:18:48