தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டு பொலிஸ் உத்தியோகத்தரை கட்டிப்பிடித்தவர் உயிரிழப்பு 

29 Oct, 2023 | 10:53 AM
image

போதைப்பொருள் பாவனையாளர் ஒருவர் தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கட்டிப்பிடித்த சம்பவத்தில், காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த நபர் கடந்த வெள்ளிக்கிழமை (27) உயிரிழந்துள்ளார்.

கடந்த 15ஆம் திகதி வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாஞ்சோலை பகுதியில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றது.

போதைப்பொருள் பாவனையாளர் ஒருவர் தனது குழந்தையை தாக்கிவிட்டு, தனது உடம்பில் பெற்றோரை ஊற்றிக்கொண்டு, தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டபோது அதனை தடுக்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் தீக்காயங்களுக்கு உள்ளானார். 

அதனையடுத்து, தீக்காயங்களுக்குள்ளான குறித்த நபரும் பொலிஸ் உத்தியோகத்தரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே, தீ வைத்துக்கொண்ட குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவர் 37 வயதானவர் என்றும் ஒரு பிள்ளையின் தந்தை எனவும் கூறப்படுகிறது.

காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்ந்தும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக செயற்பாடுகளை ஒழித்து துப்பாக்கிச்...

2025-01-16 20:02:50
news-image

4 வயது பிள்ளையுடன் நீர்த்தேக்கத்தில் பாய்ந்த...

2025-01-16 18:58:21
news-image

மட்டு. தாந்தாமலை பகுதியில் உயிரிழந்த நிலையில்...

2025-01-16 18:27:33
news-image

மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் : உண்மைகளை...

2025-01-16 18:07:01
news-image

கொழும்பு துறைமுக நகர கடலில் மூழ்கிய...

2025-01-16 17:35:54
news-image

ஜனவரி மாதத்தை தமிழ் மொழி, பாரம்பரிய...

2025-01-16 17:09:37
news-image

சிறீதரன் எம்.பி முடிந்தால் ஸ்டாலினுடன் பேசி...

2025-01-16 17:01:14
news-image

இலங்கையில் தமிழர்களுக்கு பொறுப்புக்கூறல் நீதியை உறுதிசெய்வதற்கான...

2025-01-16 17:13:43
news-image

ஜனாதிபதி பீஜிங்கில் சீன மக்கள் வீரர்களின்...

2025-01-16 17:31:50
news-image

"வளமான நாடு - அழகான வாழ்க்கை"...

2025-01-16 17:26:50
news-image

இலங்கையின் சுயாதீனத் தன்மை, ஆள்புல ஒருமைப்பாடு...

2025-01-16 17:22:49
news-image

மல்லாவி பகுதியில் மோட்டார் சைக்கிள் தீக்கிரை

2025-01-16 17:11:52