பியகம - யபரலுவ பகுதியில் இளைஞர் ஒருவர் கடற்படையினருக்கு பயந்து களனி ஆற்றில் குதித்து உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த போது கடற்படை படகொன்று குறித்த பகுதிக்கு வந்துள்ளது.

குறித்த கடற்படை படகை கண்ணுற்ற இளைஞர் உடனடியாக களனி ஆற்றில் குதித்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த நபரின் சடலத்தை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் பரம்பரகஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதானவர் என தெரியவந்துள்ளது.