ஆஸி அணிக்கெதிராக நேற்று இடம்பெற்ற இருபதுக்கு-20 போட்டியில் இறுதிப்பந்து ஓவரில் இலங்கை அணியின் லசித் மலிங்க  துடுப்பாட்ட ஆலோசனை வழங்கும் காணொளி சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

இந்த போட்டியில் இலங்கை அணி ஒரு பந்து ஓவருக்கு 6 ஓட்டங்களை பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.

இதன்போது மலிங்க அணி வீர்கள் இருக்கும் இடத்திலிருந்து துடுப்பாட்ட வீரர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

முதல் இரண்டு பந்துகளில் ஆறு அல்லது நான்கு ஓட்டங்களை பெறவேண்டும், அப்போதுதான் வெற்றி இலகுவாகும் என தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரிமன்றி போட்டி நிறைவுபெறும்வரை மலிங்க அங்கும் இங்கும் சென்றவாறு கடும் பதற்றத்தில் இருந்தமை காணொளியில் வெளியாகியுள்ளது.