மோட்டார் சைக்கிள் ஒன்று வேக கட்டுபாட்டை இழந்து வீதியில் அருகில் இருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த அண்ணனும் தம்பியும் ஸ்த்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் நேற்றிரவு பதுளை, கந்தகெட்டிய பிரதான பாதையில் கொடிகமுவ என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.

23 வயதுடைய ஜனக்க பிரேமலால் ஹசங்க மற்றும் 21 வயதுடைய பந்துல மனோஜ் ஆகிய இருவருமே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மரண வீடொன்றிற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த போதே, இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்து தொடர்பில் கந்தகெட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.