தென் கிழக்கு யேமனில் திருமணத்துக்கு அப்பாலான பாலியல் தொடர்பு வைத்திருந்தமை மற்றும் விபசாரத்தில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் பெண்ணொருவருக்கு கற்களால் எறிந்து மரணதண்டனை அல் கொய்தா தீவிரவாத குழுவால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருமணமான அந்தப் பெண்  குழுவொன்றுடன் இணைந்து விபசாரத்தில் ஈடுபட்டு வந்ததுடன் போதைப் பொருளையும் புகைத்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த அல் கொய்தா நீதிமன்றமொன்று அந்தப் பெண்ணுக்கு கற்களால் எறிந்து மரணதண்டனை நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து தீவிரவாதிகள் திறந்த வெளியில் தோண்டப்பட்ட குழியில் அந்தப் பெண்ணை தள்ளி கழுத்து வரை மண்ணால் மூடி அந்தப் பெண் இறக்கும் வரை அவர் மீது கற்கள் வீசப்பட்டுள்ளது.