டுபாயில் இடம்பெற்றுவரும் பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் நேற்றைய போட்டியில் சங்கக்காரவின் தலைமையிலான கராச்சி கிங்ஸ் அணி தனது முதல் வெற்றியினை பதிவு செய்தது.

நேற்றைய போட்டியில் இஸ்லாமாபாத் யுனைட்டட் அணியை எதிர்கொண்ட கராச்சி அணி டக்வர்த் லூவிஸ் முறைப்படி 8 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இந்த போட்டி மழைக்காரணமாக 13 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இஸ்லாமாபாத் யுனைட்டட் அணி 8 விக்கட்டுளை இழந்து 90 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கராச்சி அணி 9.4 ஓவர்களில் 75 ஓட்டங்களை பெற்றவேளை மழைக்குறுக்கிட்டது.

இதனால் டக்வர்த் லூவிஸ் முறைப்படி 8 ஓட்டங்களால் கராச்சி அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

கராச்சி அணி சார்பில் பாபர் அஷாம் ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் தெரிவுசெய்யப்பட்டார்.