2024இல் 'இந்தியன் 2' ; 2025இல் 'இந்தியன் 3' வெளியாகலாம்?! 

Published By: Nanthini

27 Oct, 2023 | 02:24 PM
image

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த சில வருடங்களாக பல பிரச்சினைகளுக்கு மத்தியில் நடந்து முடிந்தது. 

'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகத்துக்காக படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டபோதும், மூன்றாம் பாகம் வரை கதை சென்று நிறைவடையும் வகையில் காட்சிகள் நீண்டுள்ளனவாம். இதனால் தற்போது எடுக்கப்பட்டு வரும் படத்தை 'இந்தியன் 2', 'இந்தியன் 3' என இரண்டாக பிரித்து படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த முடிவுக்கு படத் தயாரிப்பு நிறுவனமும் சம்மதம் தெரிவித்து, இந்தியன் 2 மற்றும் 3 ஆகிய பாகங்களுக்கேற்ப நடிகர்களின் சம்பளத்தை உயர்த்தித் தருவதாக தெரிவித்துள்ளது என நம்பத்தகுந்த சினிமா வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன. 

அதன்படி, காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா என பலர் நடித்துள்ள படத்தின் இரண்டாம் பாகம் நிறைவு பெற்ற நிலையில், மூன்றாம் பாகத்துக்கான சில காட்சிகளை படமாக்க வேண்டியுள்ளது. அதற்கான படப்பிடிப்பு பணிகளும் விரைவில் ஆரம்பமாகிவிடும். 

அனைத்து வேலைகளும் முடிந்த பின்னர், 'இந்தியன் 2' படத்தை 2014ஆம் ஆண்டின் கோடை விடுமுறையிலும், 'இந்தியன் 3' படத்தை 2025இல் தைப்பொங்கல் தினத்தன்றும் வெளியிடுவதைப் பற்றி சிந்தித்து வருகின்றனர், படக்குழுவினர்.

இந்நிலையில், 'இந்தியன் 2' மற்றும் 'இந்தியன் 3' ஆகிய இரு பாகங்களுக்கும் இடையில் 'கமல்ஹாசன் 233' படமும், 'இந்தியன் 3' படத்துக்குப் பின்னர் 'கமல்ஹாசன் 234' படமும் வெளியாகலாம் என்றும் பேசிக்கொள்கின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துடுப்பாட்ட வீரர் ராகுல் டிராவிட்டிற்கு 'டெஸ்ட்'...

2025-03-26 16:48:38
news-image

சூர்யாவுடன் மோதும் சசிகுமார்

2025-03-26 16:03:40
news-image

'ஃபைனல் டெஸ்டினேஷன் ப்ளட்லைன்ஸ்' திகில் திரைப்பட...

2025-03-26 15:08:17
news-image

சிறந்த அனுபவம் கிடைக்க 'எம்புரான்' படத்தை...

2025-03-26 10:21:42
news-image

நடிகை பாவனா நடிக்கும் ' தி...

2025-03-26 10:04:13
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2025-03-26 09:59:34
news-image

விஜய் நடிக்கும் 'ஜன நாயகன்' படத்தின்...

2025-03-26 09:55:07
news-image

இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் மாரடைப்பால்...

2025-03-25 20:46:51
news-image

'எம்புரான்' திரைப்படத்தின் முதல் பாடலின் லிரிக்கல்...

2025-03-25 19:03:07
news-image

பொங்கலுக்கு மோதிக்கொள்ளும் ஜனநாயகன் - பராசக்தி

2025-03-25 15:16:33
news-image

நாளை முதல் ஓடிடியில் வெளியாகிறது "முஃபாசா:...

2025-03-25 12:47:10
news-image

புற்று நோயால் பாதிக்கப்பட்ட பிரபல கராத்தே...

2025-03-25 11:17:30