கொழும்பு புறக்கோட்டையில் பரவிய தீயினால் பல வர்த்தக நிலையங்களுக்குச் சேதம் : பெண் உட்பட 15 பேர் காயமடைந்து வைத்தியசாலையில்!

Published By: Digital Desk 3

27 Oct, 2023 | 11:33 AM
image

கொழும்பு புறக்கோட்டை இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள  ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை (27)  ஏற்பட்ட தீ பரவல் சம்பவத்தில் பெண் ஒருவர் உட்பட 15 பேர் காயமடைந்துள்ளதாக  வைத்தியசாலை  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் அறுவர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய தினம் காலை 09.30 மணியளவில் இரண்டாம்  குறுக்குத் தெருவில்  உள்ள ஆடை  விற்பனை  நிலையம் ஒன்றிலேயே இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.   

கொழும்பு தீயணைப்பு பிரிவினர் தீயை அணைத்துள்ளதுடன், பல வர்த்தக நிலையங்கள்   தீயில் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை, இது குறித்து புறக்கோட்டை பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் ஹமில்டன்...

2025-06-13 10:27:15
news-image

வயலிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு ;...

2025-06-13 10:10:33
news-image

யாழ் மாநகர சபையின் முதல்வராக மதிவதனி...

2025-06-13 09:58:33
news-image

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ; போதைப்பொருட்களுடன்...

2025-06-13 09:53:02
news-image

பாடசாலை கட்டடத்தின் மீது மரம் முறிந்து...

2025-06-13 10:35:59
news-image

நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் மோதிய மோட்டார் சைக்கிள் ...

2025-06-13 09:32:06
news-image

இன்றைய வானிலை 

2025-06-13 06:11:23
news-image

யாழ். மாநகரசபை மேயர் தெரிவு இன்று;...

2025-06-13 05:16:32
news-image

கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார்...

2025-06-13 05:14:37
news-image

போரா மாநாட்டுக்கு அவசியமான வசதிகளை வழங்க...

2025-06-13 05:13:08
news-image

லொக்கு பெட்டி பயன்படுத்திய 2 துப்பாக்கிகள்...

2025-06-13 05:08:14
news-image

கொழும்பு மேயராக சிறந்தவரை பெயரிட்டால் ஆதரவளிப்போம்...

2025-06-13 05:02:20