விடுதலைப் புலிகளின் கடற்படை தொடர்பாக பாகிஸ்தானில் விரிவுரை நிகழ்த்திய கடற்படைத் தளபதி! 

Published By: MD.Lucias

18 Feb, 2017 | 10:15 AM
image

விடுதலைப் புலிகளின் கடற்படை தொடர்பாகவும், அவர்களின் எழுச்சி வீழ்ச்சி தொடர்பாகவும் பாகிஸ்தான் கடற்படையின் போர்க் கல்லூரியில் இலங்கையின் கடற்படைத் தளபதி வைஸ் எட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன விரிவுரை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் எட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன, கடந்த புதன்கிழமை (15)  லாகூரில் உள்ள பாகிஸ்தான் கடற்படையின் போர்க் கல்லுரிக்குச் சென்றிருந்தார்.

பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் மற்றும் இங்கை கடற்படை உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கடற்படை அதிகாரிகள், இந்த லாகூர் கடற்படை போர்க் கல்லூரியில் அதிகாரிகளுக்கான கற்கைநெறியை பயின்று வருகின்றனர்.

இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் எட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன, 1995 ஆம் ஆண்டில், இந்த போர்க் கல்லூரியில் பயிற்சிகளை பெற்றிருந்தார்.

இங்கு சென்ற இலங்கை கடற்படைத் தளபதி, பயிற்சி பெற்று வரும் அதிகாரிகள் மத்தியில், ‘ மரபுசாரா எதிரியுடனான இலங்கை கடற்படையின் போர் அனுபவங்கள்’ என்ற பொருளில் உரையாற்றினார்.

மரபுசார எதிரியுடன் இலங்கை கடற்படை எவ்வாறு போரிட்டது, இந்த அச்சுறுத்தலை ஒரு மரபுசாரா கடற்படை எவ்வாறு எதிர்கொண்டது, மூன்று தசாப்தங்களாக நீடித்த போரில் வெற்றியீட்டியது எவ்வாறு என்று அவர் தனது உரையில் விரிவாக விளக்கிக் கூறினார்.

இதனை விரிவாக விளக்கும் வகையில், கடற்புலிகளின் பரிமான வளர்ச்சி, விடுதலைப் புலிகளின் தற்கொலை தாக்குதல் அச்சுறுத்தல், இலங்கை கடற்படையின் பதில் நடவடிக்கை, தற்கொலை தாக்குதல்களை முறியடிப்பதற்கான நடவடிக்கைகள், சிறிய படகுகள் கருத்திட்டம் குறித்த ஆய்வும், அபிவிருத்தியும், விடுதலைப் புலிகளின் மிதக்கும் ஆயுதக் களஞ்சியங்களின் அழிப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து இலங்கை கடற்படைத் தளபதி விளக்கமளித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியாவில் நிலநடுக்கம் !

2024-06-19 07:14:14
news-image

இன்றைய வானிலை

2024-06-19 06:18:12
news-image

வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் : வீதியில்...

2024-06-19 03:27:32
news-image

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தமிழ்த்...

2024-06-19 02:29:31
news-image

அதிக வருமானம் ஈட்டுவோருக்கே வாடகை வரி ...

2024-06-19 02:26:15
news-image

தெரிவுக்குழு அமைப்பதில் உடன்பாடு இல்லை; எதிர்க்கட்சித்...

2024-06-19 02:18:38
news-image

கடல் நீரில் மூழ்கிய இளைஞன்; ஆபத்தான...

2024-06-19 02:13:43
news-image

வரிப் பணத்தை முறையாக அறவிட்டால் புதிய...

2024-06-18 15:21:30
news-image

ஒரு நாள் இரவு காட்டில் வாழ்ந்த...

2024-06-19 01:28:05
news-image

உயர் நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றுத்துறை விமர்சிப்பது...

2024-06-18 15:08:11
news-image

களுபோவில வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலையில் மனித பாவனைக்குதவாத...

2024-06-18 21:41:13
news-image

இலங்கை வரவுள்ள சீன இராணுவ மருத்துவக்...

2024-06-18 14:47:35