ஊழலில் ஈடுபட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு எதிராக அமைச்சர் ரமேஷ் பத்திரண நடவடிக்கை எடுக்க வேண்டும் - காவிந்த ஜயவர்தன வலியுறுத்தல்

Published By: Vishnu

26 Oct, 2023 | 11:20 PM
image

(எம்.மனோசித்ரா)

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுடன் இணைந்து ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு எதிராக தற்போதைய அமைச்சர் ரமேஷ் பத்திரண சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன வலியுறுத்தினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை வலியுறுத்திய அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான எம்மால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டிருந்தாலும், அன்று அதில் நாம் குறிப்பிட்ட காரணிகள் உண்மை என்பது தற்போது நிரூபனமாகியுள்ளது. அது மாத்திரம் போதாது. எம்மால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அமைச்சர் மாற்றப்பட்டுள்ள போதிலும், அவருடன் இணைந்து ஊழல், மோசடிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் எவரும் மாற்றப்படவில்லை. இவர்களுக்கு எதிராக எவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்று தற்போதைய சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரணவிடம் கேள்வியெழுப்புகின்றோம். அப்பாவி மக்களின் வரிப்பணமே இவர்களால் மோசடி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் 65 000க்கும் அதிகமான சிறுவர்கள் மந்த போஷனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவை தொடர்பில் தற்போதைய சுகாதார அமைச்சர் அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐஸ் போதைப்பொருளை சொக்லேட்டில் மறைத்து கடத்தல்: ...

2024-03-03 18:46:13
news-image

நாட்டில் நாளைய வெப்பமான காலநிலை தொடர்பில்...

2024-03-03 17:37:58
news-image

யாழ். வடமராட்சியை சென்றடைந்தது சாந்தனின் புகழுடல்...

2024-03-03 17:52:54
news-image

இந்தியாவின் மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் முயற்சிகளுக்கு...

2024-03-03 17:23:31
news-image

கசினோவில் தோற்றதால் போதைப்பொருள் கடத்தல் குழுவுடன்...

2024-03-03 17:27:00
news-image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் இணைக்கப்பட்டுள்ள இரண்டு பெல்ஜியம்...

2024-03-03 16:45:13
news-image

'அரசியல்மயப்படுத்தப்பட்ட மனித உரிமைகளுக்கு' துணைபோகும் இரட்டை...

2024-03-03 16:11:58
news-image

பயங்கரவாத தடைச் சட்டத்தை பதிலீடு செய்வதில்...

2024-03-03 15:55:24
news-image

மட்டக்களப்பு - நாவலடியில் விபத்து :...

2024-03-03 15:42:03
news-image

கொழும்பு, கொட்டாஞ்சேனையில் தாக்குதல்: மூவர் படுகாயம்,...

2024-03-03 15:29:44
news-image

சாந்தனின் உடல் தாங்கிய ஊர்தியை மறித்த...

2024-03-03 15:12:34
news-image

சாந்தனின் புகழுடலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்...

2024-03-03 15:01:07