ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் பிராந்திய பணிப்பாளர் சஞ்சய் விஜேசேகரவுடன் சஜித் பிரேமதாச சந்திப்பு

Published By: Vishnu

26 Oct, 2023 | 11:18 PM
image

எமது நாட்டின் சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளின் தற்போதைய பிரச்சினைகள் மற்றும் அதன் எதிர்காலம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான புரிந்துணர்வு சார் சந்திப்பொன்று வியாழக்கிழமை (26) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றதோடு, இதில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் (UNICEF) பிராந்திய பணிப்பாளர் சஞ்சய் விஜேசேகர ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஐக்கிய நாடுகளின் சர்வதேச சிறுவர் நிதியத்தின்(UNICEF) இலங்கைக்கான பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக் அவர்களும் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தார்.

ஐக்கிய நாடுகளின் சர்வதேச சிறுவர் நிதியம்(UNICEF),ஐக்கிய நாடுகள் சனத் தொகை நிதியம்(UNFPA) மற்றும் உணவு விவசாய ஸ்தாபனம் (FAO) என்பவற்றுடன் இணைந்து இலங்கையின் சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தியால் எவ்வாறு செயலூக்கமாக பங்களிக்க முடியும் என்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கருத்துத் தெரிவித்தார்.

எமது நாட்டின் சுகாதாரம் மற்றும் கல்வி முறைமைகளை மேம்படுத்தும் வகையில் யுனிசெப் அமைப்பு கூடிய ஒத்துழைப்பை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச யுனிசெப் பிரதிநிதிகளிடம் கடுமையாக கோரிக்கை விடுத்தார்.

இக்கலந்துரையாடலில்,இலங்கை குடும்பங்கள் எதிர்கொள்ளும் ஊட்டச்சத்துச் சவால்கள்,எமது நோய் தடுப்பு மற்றும் குணப்படுத்தும் சிகிச்சைகள்,சுகாதாரத் துறையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து இரு தரப்பினரும் அவதானம் செலுத்தினர்.

இவ் விடயங்களில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொண்டிருக்கும் ஆழ்ந்த அறிவைப் பாராட்டிய UNICEF இன் பிராந்திய பணிப்பாளர்,ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்தும் சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பராமரிப்பற்ற நிலையில் வவுனியா புதிய பேருந்து...

2025-03-19 11:48:53
news-image

ஏறாவூர் பகுதியில் ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலயம்...

2025-03-19 11:10:32
news-image

புதிதாக சிந்திப்போம், புதுமை காண்போம் வழிகாட்டல்...

2025-03-19 11:07:05
news-image

நகை கடையிலிருந்து தங்கச் சங்கிலிகளை திருடிச்...

2025-03-19 11:12:28
news-image

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 11,081 குடும்பங்களுக்கு காணிகள்...

2025-03-19 11:09:33
news-image

வீட்டிலிருந்த அங்கவீனரை கொலை செய்து பெறுமதியான...

2025-03-19 11:37:11
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக...

2025-03-19 10:08:17
news-image

பா. உ. அர்ச்சுனாவால் தேசிய நல்லிணக்கத்திற்கு...

2025-03-19 10:59:36
news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து...

2025-03-19 09:23:29
news-image

இராமேஸ்வரம் மீனவர்கள் மூவர் இலங்கை கடற்படையால்...

2025-03-19 11:35:02
news-image

தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஏற்றுமதி துறைக்கு...

2025-03-19 09:25:20
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவர் கொலை...

2025-03-19 09:05:38