''உங்களின் போராட்டம் நியாயமானது தென்னிலங்கைக்கு தெளிவுபடுத்துவேன்''

Published By: Priyatharshan

18 Feb, 2017 | 09:11 AM
image

சொந்த மண்ணில் மீளவும் குடியேறுவதற்காக  கேப்பாபிலவு பிலவுக் குடியிருப்பு மக்களின் தொடர்ச்சியான போராட்டம் நியாயமானது. ஊங்களின் கோரிக்கைகளை தென்னிலங்கைக்கு தெளிவு படுத்துவேன். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட அரசியல் பிரதிநிதிகளிடத்தில் எடுத்துரைப்பேன் என போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களிடத்தில் தென்மாகாண சபை உறுப்பினர் பத்தேகம சமித்த தேரர் தலைமையிலான குழவினர் உறுதியளித்துள்ளனர்.

தமக்குச் சொந்தமான காணிகள் விமானப்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்து முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவு பிலவுக்குடியிருப்பைச் சேர்ந்த மக்கள் தொடர்ச்சியாக நேற்று வெள்ளிக்கிழமையும் 18ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 

இராணுவம், விமானப்படையினர், புலனாய்வாளர்கள் ஆகியோரின் பிரசன்னத்துக்கு மத்தியில் தமது நிலைப்பாட்டை மாற்றாது தொடர்ந்தும் சொந்தை மண்ணை மீட்டெடுக்கும் போராட்த்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவாக வடக்கு கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு தரப்பினர்களும் கவனயீர்ப்பு பேரணிகளையும், குரல்களையும் கொடுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நேற்றையதினம் தென்மாகாண சபையின் உறுப்பினரான பத்தேகம சமிந்த தேரர் தலைமையில் தியதந்ததேரர், தம்பராயத்த தேரர் ஆகியோர் அடங்கிய குழவினர்  கேப்பாபிலவிற்கு நேரடியாக விஜயம் செய்து அம்மக்களின் போராட்டம் தொடர்பான யதார்த்த நிலைமைகளை பார்வையிட்டதோடு மக்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்து கொண்டனர்.  இச்சந்தர்ப்பத்தின் போது அம்மகளிடத்தில் கருத்து வெளியிடுகையிலேயே தென்மாகாண சபையின் உறுப்பினரான பத்தேகம சமிந்த தேரர் மேற்கண்டவாற தெரிவித்தார்.    

தேன்னிலங்கையிலிருந்து நேற்று பிற்பகல் 3.30மணியளிவில் கேப்பாபிலவுக்குச் சென்ற தென்மாகாண சபையின் உறுப்பினரான பத்தேகம சமிந்த தேரர் தலைமையிலான குழவினர் அம்மக்களின் கோரிக்கைகளை விரிவாக கேட்டறிந்து கொண்டனர். 

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தமது நியாயமானகோரிக்கையை வெளிப்படுத்தினர். அதாவது. யுத்தம் நடைபெறுவதற்கு முன்னதாக கேப்பாபிலவு பிலவுக்குடியிருப்பிலேயே நாங்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்துள்ளோம். யுத்தத்தினால் ஏற்பட்ட இடம்பெயர்வை அடுத்து நாம் மீண்டும் சொந்த இடத்திற்கு  வருகை தந்த போது எமது நிலங்களில் விமானப்படைத்தளம் அமைக்கப்பட்டிருந்தது.

ஏமக்குச் சொந்தமான காணிகளை விடுவிக்குமாறு நாம் கோரிக்கைகளை விடுத்தபோது விமானப்படையினர் சூரி கிராமம் என்ற பெயருடைய பூமியை கேப்பாபிலவு என அடையாளப்படுத்தி அங்கு எம்மை குடியேற்றுவதற்கு முயற்சிகளை செய்தார்கள். இது உண்மையிலேயே சர்வதேசத்தை ஏமாற்றுதற்கு எடுக்கப்பட்ட ஒரு நாடகமாகும். 

அதற்கு எதிராக நாம் குரல் கொடுத்து போராடிய தருணத்திலேயே எமது காணிகளை விடுவிப்பதாக படையினர் ஒத்துக்கொண்டனர். ஆதனையடுத்து நாம் சொந்த நிலங்களுக்கு செல்வதற்காக வந்தபோது வனவிலங்கு பரிபாலன சபையினரிடத்தில் அனுமதி பெற்றுவருமாறு காலதமாதப்படுத்த முனைந்தனர்.

யுத்தம் நிறைவடைந்து எட்டு வருடங்கள் கடந்துள்ள போதும் எமது சொந்த மண்ணில் மீண்டும் குடியேறுவதற்கு முயடிதுள்ளோம். நாம் மிகவும் வறுமைக்குள் சிக்கித் தவிக்கின்றோம். ஏமது சொந்த மண்ணிலேயே எம்மை குடியேற்ற வேண்டுமென்றே தான் கேட்கின்றோம். எமது மண்ணில் நாம் மீளவும் மீளக்காலடி எடுத்து வைக்கும் வரையில் போராட்த்திலிருந்து பின்வாங்கப்போவதில்லை என்றனர். 

இதனையடுத்து அம்மக்களை சமாதானம் செய்த தென்மாகாண சபையின் உறுப்பினரான பத்தேகம சமிந்த தேரர் தலைமையிலான குழுவினர், உங்களது போராட்டம் நியாயமானது தான். நுpங்கள் உங்களுடைய சொந்த மண்ணில் மீண்டும் குடியேறவேண்டுமென்பதில் உறுதியாக இருக்கின்றீர்கள்.

உங்களுடைய போராட்டம் தொடர்பில் தென்னிலங்கைக்கும் அரசியல் வாதிகளுக்கு தெளிவற்றதொரு நிலைமை காணப்படுகின்றது. ஊங்களின் கோரிக்கையை நான் தென்னிலங்கைக்கும் அரசியல்வாதிகளுக்கும் தெளிவுபடுத்துவேன். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்று உங்களின் கோரிக்கைளை எடுத்துரைப்பேன் என உறுதி மொழி வழங்கினார்.

இக்கலந்துரையாடல் இடம்பெற்றபோது வடமாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், து.ரவிகரன் மற்றும் சிவன் அறக்கட்டளையின் தலைவரும் ரெலோ அமைப்பின் முக்கியஸ்தருமான கணேஷ் வேலாயுதம் ஆகியோர் உள்ளிட்டவர்களும் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19