இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரும் நியூசிலாந்து வசம்

Published By: Priyatharshan

05 Jan, 2016 | 11:54 AM
image

இலங்கை அணிக்கெதிரான 5 ஆவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 36 ஓட்டங்களால் வெற்றிபெற்று 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-1 என கைப்பற்றியது.

இரு அணிகளுக்குமிடையிலான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய முனைப்புடன் ஒருநாள் தொடரில் களமிறங்கிய நியூசிலாந்து அணி அதனையும் 3-1 என கைப்பற்றியுள்ளது.

நியூசிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அவ்வணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடியது.

இத் தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றதுடன் 3 ஆவது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. 

இதேவேளை, இரு அணிகளுக்குமிடையிலான 4 ஆவது போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், முக்கியமானது இறுதியுமான 5 ஆவது போட்டி இன்று இடம்பெற்றது.

இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 5விக்கெட்டுகளை இழந்து 294 ஓட்டங்களைப் பெற்றது.

நியூசிலாந்து அணி சார்பாக துடுப்பாட்டத்தில் குப்தில் 102 ஓட்டங்களையும் வில்லியம்ஸன் மற்றும் டெய்லர் ஆகியோர் தலா 61 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக குலசேகர 3 விக்கெட்டுகளையும்  பிரதீப் மற்றும் டில்ஷான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்நிலையில் 295 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு  ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்கள் ஒத்துழைப்பு வழங்க மறுக்க இலங்கை அணி 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இறுதியில் இலங்கை அணி 47.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 258 ஓட்டங்களைப் பெற்று 36 ஓட்டங்களால் தோல்வியடைந்து தொடரை நியூசிலாந்திடம் 3-1 என பறிகொடுத்தது.

இலங்கை அணி சார்பாக துடுப்பாட்டத்தில் மெத்தியுஸ் 95 ஓட்டங்களையும் சந்திமல் 50 ஓட்டங்களையும்  பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் நியூசிலாந்து  அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய ஹென்றி 5 விக்கெட்டுகளையும் போல்ட் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 3-1 என கைப்பற்றியது.

இப் போட்டியின் ஆட்டநாயகனாக ஹென்றி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49