முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்கள்  தங்களின் சொந்த நிலங்களில்  மீள்குடியேறுவதற்காக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இந்த மக்களின் போராட்டத்திற்கு நாளுக்கு நாள்   பல்வேறு தரப்புக்களும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், மக்களும் தங்களுடைய காணிகள் மீண்டும் தங்களுக்கு கிடைக்காவிடின்   விமானப்படையினரின் தடையையும் தாண்டி தங்களின் காணிகளுக்குச் செல்ல வேண்டிவரும் என தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று  மக்களின் போராட்டம் இடம்பெறும் இடத்தில் விமானப்படையினர் எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை காட்சிப்படுத்தியிருக்கின்றார்கள்.

அதில் “இது விமானப்படையினரின்  காணியாகும் தேவையில்லாமல் உட்செல்லல் தடை” என்றும்  “தேவையில்லாமல் சென்றால் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காவீர்கள்” என்ற எழுத்து  பிழையுடன் அறிவித்தலை ஒன்றை காட்சிப்படுத்தியிருக்கின்றார்.

இது அனைத்து தரப்பினர்களிடமும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.  தங்களின்  சொந்த காணிகளுக்குச் செல்வதற்காக  மக்கள் மேற்கொள்ளும்  ஜனநாயக போராட்டத்தை நல்லாட்சி அரசு ஆயுத முனையில் நசுக்க முனைக்கிறது என மக்கள் தெரிவிக்கின்றனர்.