இலங்கையை புதிய பொருளாதார முறைமையை நோக்கி இட்டுச் செல்வதற்கு ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு

25 Oct, 2023 | 07:55 PM
image

(எம்.மனோசித்ரா)

விவசாய மற்றும் தொழில்நுட்பத் துறைகளின் புரட்சிகர மாற்றத்திற்கான பல்வேறு புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் போது, பொறியியலாளர்களின் பங்களிப்பு மிக மிக்கியமானது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 

தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளின் விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சுக்களின் கீழ் முன்னெடுக்கப்படும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதாகவும் மேலதிக நிபுணத்துவத் தெரிவுகளைப் பெற்றுக்கொள்வதற்கான இயலுமை தொடர்பில் தேடியறிவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்  இன்று புதன்கிழமை (25) நடைபெற்ற 117 ஆவது இலங்கை பொறியிலாளர்கள் நிறுவனத்தின் வருடாந்த அமர்விலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நிகழ்வில் மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தொழில்நுட்ப புத்தாக்க முயற்சிகள் மற்றும் விவசாய நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டத்துடன் இலங்கையை புதிய பொருளாதார முறைமையை நோக்கி இட்டுச் செல்வதற்கு ஒன்றுபடுமாறும் பொறியியல் நிறுவனங்களிடம் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தார்.

போட்டித்தன்மை, டிஜிட்டல் மாற்றம் மற்றும் பசுமை பொருளாதாரம் ஆகிய துறைகளில் பொறியியலாளர்கள் சிறப்பான பணியை ஆற்றி வருவதாகவும், அந்த துறைகளைப் பலப்படுத்தினால் நாட்டில் துரித பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்த முடியுமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.  

நாட்டின் பல்வேறு துறைகளிலும் பொறியியலாளர்களின் பங்களிப்பை மேம்படுத்த எதிர்பார்ப்பதாகவும், அதனை உரிய வகையில் பயன்படுத்திக் கொள்வதற்கான திட்டமிடலுடன் செயற்படுவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.  

மகாவலி வலயம் மற்றும் தோட்டப் பகுதிகளில் பயன்படுத்தாத 7 - 10  இலட்சம் ஏக்கர் வரையிலான காணிகள் உள்ளதாகவும்,  விவசாய நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டத்தின் போது அவற்றைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அதேபோல் பல்வேறுபட்ட விவசாய ஆய்வு நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து விவசாய தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் என்ற நிறுவன கட்டமைப்பின் கீழ் கொண்டுவரவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தனியார் துறையினரின் பங்களிப்பையும் பெற்றுக்கொண்டு விவசாய ஆய்வுப் பணிகளை முன்னெடுக்கும் பட்சத்தில் விவசாய நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளை வலுவாக முன்னெடுக்க முடியும் என எதிபார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அத்தோடு 1970 ஆம் ஆண்டு முதல் இரு துறைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் விவசாய மற்றும் பெருந்தோட்ட துறைகளை விரைவில் ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

கடன் நீடிப்பு மற்றும் நிலையான பொருளாதாரத்தை கட்டமைத்தல் உள்ளிட்ட இலக்குகளை அடைய அறிவுபூர்வமான மற்றும் வலுவான பிரவேசம் அவசியம் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்துரைத்தார்.

இந்நாட்டு பொருளாதாரத்தின் மைல்கல்லான பசுமை ஹைட்ரஜன் ஏற்றுமதிக்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் தேடியறிந்து, அதனை செயற்படுத்தத் தேவையான தொழில்நுட்பத்தை உருவாக்கும் வல்லமை பொறியலாளர்கள் வசமுள்ளதெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.  

குறுகிய காலத்தில் நிறைவு செய்யப்பட்ட கண்டி வீதி நிர்மாண பணிகள், மகாவலி வேலைத்திட்டங்கள் இந்நாட்டு பொறியியல் தொழில்நுட்பத்தின் உயர் தரத்தை உலகிற்கு காண்பிக்கும் வகையில் அமைந்திருப்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு பொறியியலாளர்கள் வழங்கிவரும் பங்களிப்புக்கும் நன்றி தெரிவித்தார்.

பொறியியல் தொழில்நுட்பத்தின் ஒத்துழைப்பு இன்றி நாட்டை முன்னேற்றுவது சவாலானது என்றும், திறன்மிக்க பொறியியலாளர்களை உருவாக்கும் திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும், தேவைப்படும் பட்சத்தில் வெளிநாட்டு பொறியியலாளர்களின் உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.  

இந்த தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு அவசியமான மனித வள பற்றாக்குறைக்கு தீர்வு தேடும் போது, தொழில்நுட்ப கல்வி மற்றும் பொறியியல் தொழில் திறன்களின் முக்கியத்தையும் வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் அதற்கான புதிய திட்டங்களைப் பரிந்துரைக்கும் என்றும் தெரிவித்தார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துபாய் இரவு விடுதியில் மோதல்: 13...

2024-02-23 22:07:27
news-image

சீன நகரில் 100 வாகனங்கள் ஒன்றுடன்...

2024-02-23 21:44:19
news-image

குவைத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இலங்கையர்...

2024-02-23 20:58:08
news-image

கட்டுநாயக்கவில் கைதான யாழ்ப்பாணம், வவுனியாவைச் சேர்ந்த...

2024-02-23 19:53:21
news-image

வழக்குத் தொடுநர்களுடன் சமரசத்துக்காக மூவர் கொண்ட...

2024-02-23 19:40:36
news-image

தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில்...

2024-02-23 19:44:18
news-image

புளொட் இராகவனின் அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுப்பு

2024-02-23 18:31:37
news-image

புலம்பெயர் இலங்கையர்களை கணக்கெடுக்கும் பணிகள் விரைவில்...

2024-02-23 18:12:51
news-image

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவுக்கு...

2024-02-23 18:18:03
news-image

யாழ். பல்கலை விஞ்ஞான பீட மாணவர்களின்...

2024-02-23 17:38:55
news-image

வட்டவளையில் தோட்டமொன்றில் புதைக்கப்பட்ட 6 மாத...

2024-02-23 18:30:28
news-image

மன்னார் - வங்காலையில் ஆசிரியரால் தாக்கப்பட்ட...

2024-02-23 17:29:20