மாற்றுத்திறனாளிகள் இலங்கை  கிரிக்கெட் அணி  3 ஆவது மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்தியாவுக்கு பயணமாகவுள்ளது.

இந்நிலையில் அணி வீரர்களுக்கு ஒரு உத்வேகத்தைக் அதிகரிக்குமுகமாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவரால் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் வைத்து அண்மையில் சலுகைகள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்தியாவின் ஹைதராபாத்தில் இடம்பெறவுள்ள இத் தொடரில் இலங்கை அணி சார்பாக 15 திறமையானவீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த 2012 ஆம் ஆண்டு ஆசியக் கிண்ணத் தொடரில் விளையாடிய இலங்கை மாற்றுத்திறனாளிகள்கிரிக்கெட் அணி 2 ஆவது இடத்தையும் முதலாவது ஆசிய இருபதுக்கு-20 தொடரில் விளையாடி 3 ஆவதுஇடத்தையும் பெற்றுள்ளது.

 

இந்நிலையில் இம் மாதம் 26 ஆம் திகதி முதல் மரர்ச் மாதம் 5 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியை பார்வையிடுதவதற்கு இலங்கை அணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.