20 இலட்சம் ரூபா கப்பம் கோரி வர்த்தகருக்கு கொலை மிரட்டல் - சந்தேக நபர் கைது

25 Oct, 2023 | 04:21 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

வர்த்தகர் ஒருவருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து 20 இலட்சம் ரூபா கப்பம் கோரிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறான அச்சுறுத்தல் தொலைபேசி அழைப்புகள் கிடைத்தால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த  வியாழக்கிழமை (19) ஆம் திகதி மாலை இனந்தெரியாத நபர் ஒருவர் கையடக்கத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு 20 இலட்சம் கப்பம் கோரி கொலை மிரட்டல் விடுத்ததாக வர்த்தகர் ஒருவர்  முல்லேரிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.  

அதற்கமைவாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு அமைய சந்தேக நபர் நேற்று முன்தினம் மாலை முல்லேரியா அங்கொட, தெல்கஹவத்தை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 51 வயதுடைய சந்தேக நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் வாழும்  ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற செயல்களுடன் தொடர்புடைய ஒருவரின் உத்தரவின் பேரில் குறித்த நபர் வர்த்தகரை அச்சுறுத்தி பணம் பறிக்க முயற்சித்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அண்மைக்காலமாக இதுபோன்று பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இவ்வாறான அச்சுறுத்தல் தொலைபேசி அழைப்புகள் கிடைத்தால்

உடனடியாக அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்தில்  அறிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாதிகள் போல் செயற்படுவதை எதிர்க்கட்சிகள் தவிர்க்க...

2024-06-13 16:54:47
news-image

கிராம உத்தியோகத்தர்களின் புதிய சேவை யாப்புக்கு...

2024-06-13 20:54:34
news-image

நாளை 2 மணிக்குள் சாதகமான பதிலின்றேல்...

2024-06-13 17:35:08
news-image

நுவரெலியாவில் உடலின் கீழ் பகுதி இல்லாமல்...

2024-06-13 20:19:38
news-image

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய...

2024-06-13 19:53:18
news-image

இரு முச்சக்கர வண்டிகள் நேருக்குநேர் மோதி...

2024-06-13 19:07:27
news-image

அலங்கார மீன் ஏற்றுமதி மூலம் கடந்த...

2024-06-13 17:36:34
news-image

மன்னாரிலும் தபால் தொழிற்சங்கத்தினர் சுகயீன போராட்டம்

2024-06-13 17:34:27
news-image

இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி...

2024-06-13 17:33:18
news-image

தமிழகத்தில் கரையொதுங்கிய அனலைதீவு கடற்றொழிலாளர்களை நாட்டிற்கு...

2024-06-13 17:27:50
news-image

மற்றுமொரு ரயில் தடம் புரள்வு ;...

2024-06-13 17:13:01
news-image

யாழில் தேசிய மக்கள் சக்தியினரால் துண்டுப்...

2024-06-13 17:02:22