கிளிநொச்சி ஜெயந்திரநகரைச் சேர்ந்த 17 மாணவி ஒருவர்  கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளார்.

இவரது மரணத்திற்கு டெங்கு அல்லது எலிக்காச்சல் காரணமாக இருக்கலாம் என சந்தேகிப்பப்படுகின்ற போதும் டெங்கு காச்சலுக்கான வாய்பே அதிகமுள்ளது என i வைத்தியசாலை தகவல்கள் தெரிவிகின்றன.


மாணவியின் மரணத்திற்கான காரணத்தை அறிந்துகொள்வதற்காக மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பட்டுள்ளது எனவும் வைத்தியசாலை தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.


குறித்த மாணவி காய்ச்சல் கடந்த ஞாயிற்றுக் கிழமை கிசிச்சை பெற்றுள்ளார். பின்னர் சுகமடைந்த நிலையில்  மீண்டும் கால், கை குத்து காரணமாக நேற்று வியாழக்கிழமை வைத்தியசாயைலில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை மரணமடைந்துள்ளார்.


டெங்கு காய்ச்சல் ஒரு நோயாளிக்கு மூன்று நிலைகளில் தாக்குகின்றது எனவும், அதில் ஒரு நிலை காய்ச்சல் ஏற்பட்டு பின்னர் அது சுகமடைந்த நிலையில் உடலில் டெங்கு தொற்று தீவிரமடைவது. எனவே காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சை பெற்ற பின்னர் உடல் வழமைக்கு மாறாகவும், கை,கால் குத்து  வலி போன்ற  அறிகுறிகள் தொடர்ந்தும் காணப்பட்டால் உடனடியாக அரச மருத்துவமனையை நாடி உரிய பரிசோதனையை மேற்கொள்ளுமாறு மருத்துவர்கள் மக்களிடம் கேட்டுக்கொள்கின்றனர்.


கிளிநொச்சி  மாவட்டதத்தில் தற்போது டெங்கு தொற்று வேகமாக பரவி வருவதனால் மக்கள்  நுளம்பு பெருக்கம் ஏற்படாத வகையில் சுற்றுச் சூழலை வைத்திருப்பதோடு  உடனடியான உரிய சிகிகை பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றனர். மாவட்ட சுகாதார துறையினர் வேண்டு கோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.