(எம்.மனோசித்ரா)
கொவிட் தொற்று நிலைமையால் இழக்கப்பட்ட தமது சுற்றுலாத்துறை சந்தைப்பங்குகளை மீண்டும் உரித்தாக்கிக் கொள்வதற்காக பல ஆசிய சுற்றுலாப் பயண முடிவிடங்கள் தற்போது கடுமையான போட்டிக்குள் இயங்குகின்றதுடன், பல நாடுகள் சுற்றுலாப் பயணிகளிடம் கட்டணம் அறவிடாமல் இலவசமாக விசா வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அதனால், உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொவிட் தொற்று, அத்துடன் பின்னர் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடியால் பின்னடைவைச் சந்தித்துள்ள எமது நாட்டின் சுற்றுலாத்துறையின் மறுமலர்ச்சிக்காக புதிய சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு வேலைத்திட்டங்கள் சிலவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் 3 வருடங்களில் இலங்கைக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 5 மில்லியன்களாக அதிகரிக்கின்ற இலக்குடன் கூடியதாக பிரதமர், சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கமையவே எதிர்வரும் 2024.03.31 ஆம் திகதி வரை சீனா, இந்தியா, ரஷ்யா, தாய்லாந்து, இந்தோனிசியா, மலேசியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்து வருகை தருகின்ற சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச சுற்றுலா விசா வழங்குவதற்கான வேலைத்திட்டத்தின் முன்னோடி செயற்றிட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.
அது மாத்திரமின்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு உலக மரபுரிமை மற்றும் வரலாற்று மையங்களில் நெரிசலின்றி பிரவேசிப்பதற்காக கட்டணம் அறவிடுகின்ற அனைத்து இடங்களுக்கும் ஒரே தடவையில் கட்டணம் செலுத்துகின்ற பக்கேஜ் முறையிலான நுழைவுச்சீட்டை விமான நிலையத்தில் அல்லது இணையவழி ஊடாக கொள்வனவு செய்வதற்கான வசதிகளை ஏற்பாடு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை புகையிரத சேவையின் சுற்றுலாப் பயணிகள் புகையிரதக் கூடத்திற்கான தேவையான பிரயாணச் சீட்டுக்களை இணையவழி ஊடாக அல்லது ஒரே தடவை செலுத்திப் பெற்றுக்கொள்ளக்கூடிய பொது பிரயாணச் சீட்டை விமான நிலையத்தில் கொள்வனவு செய்வதற்கான வசதிகளை ஏற்பாடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM